❤ 56 ❤

4.3K 181 90
                                    

ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்..
இந்த மயக்கத்தில்
எத்தனை தயக்கம்..
இந்த தயக்கத்திலும்
வரும் நடுக்கம்..
என்றாலும் கால்கள்
மிதக்கும்..

"சாரூரூரூ.." சக்தியின் குரலே வீடு முழுவதும் ஒலிக்க இருந்தும் அந்த பெயரின் சொந்தக்காரியோ இயன்றளவு தான் படுத்திருந்த கட்டிலில் புதைந்து கையை மட்டும் வெளியே நீட்டி..

"பத்து எண்ணுங்க சக்தி.." என்றுவிட்டு மீண்டும் கையை இழுத்துக்கொண்டாள்.

"இதுவரை பத்து தடவ பத்து வர எண்ணியாச்சி சாரூரூ..இந்த முறை எண்ணிட்டு நான் கண்ண திறக்குறப்போ நீ இதே இடத்துல இருக்க கூடாது..அப்புறம் நடக்குறதே வேற.." என்று விட்டு கண்ணை மூடி எண்ணத்தொடங்கினான் சக்தி.

கடந்த அரைமணி நேரமாய் சாரு படுத்தியதற்கு எல்லாம் பொருமையாக செயல்பட்டுக்கொண்டிருந்தான். பின்ன ஒரு வார்த்தை விடுபட்டாலும் போதுமே இது தான் சாக்கு என உட்கார்ந்து முகத்தை உம் என தூக்கி வைத்து அழுகிறேன் என்ற பெயரில் கண்ணை சொறிந்து சிவப்பாக்கி காலேஜ் கட் அடிப்பாள்.

போதாக்குறைக்கு இலவசமாக அம்மா அப்பாவிடம் வேறு சில பல திட்டுக்கள் சக்திக்கு..அடுத்து அவளுக்கு சக்தியிடன் ஏதாவது தேவை ஏற்படும் வரை நிலா சதீஷுடன் சங்கம் அமைத்துக்கொண்டு சுற்றித்திரிவாள். இதுதான் வழமையாக நடப்பதே என தன்னை இயன்றளவு கட்டுப்படுத்திக்ககொண்டு எண்ணினான் சக்தி.

அதேநேரம் இன்று வீட்டுக்கு காலையில் மதன் வருவதாக சாவித்ரி இரவு கூறியதிலிருந்து நிலா சதீஷ் இருவரும் தீட்டி இருந்த திட்டத்தை செயல்படுத்த காலை ஆறு மணிக்கெல்லாம் தொலைநோக்கி சேற்று நீர் பக்கெட் என மாடியில் கூடியேறி இருந்தனர்.

இவர்களுக்கு பொழுது போக்குக்கென சக்தியை சாரு படுத்தும் பாடு வேறு துல்லியமாய் மாடி வரை ஒலிக்க இடையிடையே சிரித்து சிரித்து ஹை பை போட்டுக்கொண்டனர். இங்கு அறையில் பத்து எண்ணி விட்டு சக்தி கண் திறக்க அவனை வரவேற்றது வெறும் கட்டில் தான். குட் என வாய்விட்டே கூறியவன் வெளியே செல்ல திரும்பி விட்டு ஏதோ தோன்ற கட்டில் அருகில் வந்து குனிந்து பார்த்தான். அங்கு போர்வையில் சுருண்டு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தாள் சாரு.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now