❤ 50 ❤

4.9K 228 94
                                    

ஒரே ஒரு புன்னகை
போதும் அன்பே
உன்னக்கென
காத்து கிடப்பேனே
ஆயிரம் கோடி
ஆண்டுகள் தாண்டி
உன்னில் வாழ
துடிப்பேனே...

அனைவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டவர்களின் கார் அந்த சிட்டியின் சிறந்த கல்லூரி முன் வந்து நின்றது. விழி விரித்து பார்த்த சாருவின் கண்களில் நிரம்பியிருந்த பயத்தை கண்டு கொண்ட சக்தி காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.

சல்வாரை இறுக்கப்பிடித்து பிசைந்து கொண்டு இருந்தவள் கையை மெதுவாக எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

அவள் கண்களை நேராய்ப்பார்த்தவன்.." இங்க பாருடா.. எனக்கு தெரியும் உனக்கு பயம் அதான? ஹ்ம் நான் சொல்லுறத நல்லா மனசுல வெச்சிக்கனும் ஓகே வா.. இந்த உலகத்துல நான் நீ அப்புறம் அதோ அங்க போறாங்களே அவங்க... எல்லாருமே ஒரே மட்டம் தான்.. எல்லாரும் மனிதர்கள் தான். ஒருவேளை நம்மள விட சிலவங்க அவங்களோட அனுபவம் அப்புறம் கத்துகிட்டதுல இருக்க விடயங்கள பொருத்து அதிகம்ன்னு சொல்லலாம். அதுக்காக நமக்கு அறிவு இல்ல.. நாம முட்டாள்ன்னு சொல்லலாமா? ஹ்ம்? முடியாதுல.. கடவுள் அறிவ எல்லாருக்கும் ஒரே அளவா தான் கொடுத்திருக்காரு.. தேடி படிக்கிறதுல தான் இருக்கு எல்லாம். அதோடு எல்லாருக்கும் வாழ்க்கையில ஒரு கட்டத்துல நிச்சயமா அவமானமும் தடுமாற்றமும் இருந்திருக்கும். அதை தாண்டி போறவன் தான் நாளைக்கு ஏதோ ஒரு மாற்றத்துக்கு காரணமா இருப்பான். அதோட என்னால முடியாது என்று முடங்கிப்போறவன்.. அவன் யாருன்னு நான் உனக்கு சொல்ல தேவையில்ல.. நாம எத்தனையோ பேர பார்க்கிறோம்.
உலகமே சொல்லுறவன் தான் சாதனையாளன்னு இல்ல.. நம்ம இலட்சியத்த நாம அடஞ்சிட்டம்ன்னா நமக்கு நாம சாதனையாளன் தான். ஒன்னுக்கும் பயப்பட கூடாது. உன்னால முடியும். இது மட்டும் நினைச்சிக்கோ. நல்லா செய், ஓகே..ஆல் ஆர் சேம்..இந்த மந்திரத்த சொல்லிக்கோ..அப்படின்னா எல்லாரும் சமம்ன்னு அர்த்தம்" கூறிவிட்டு அவள் முகத்தை கையில் ஏந்தி நெற்றியின் இதழ் பதித்தான் சக்தி.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now