உன்னோடு ஓர் பயணம்...

275 43 61
                                    

கிழக்குக் கடற்கரைச் சாலையில்
இருசக்கர வாகனத்தில்...
இடைவெளி ஏதுமின்றி இருக்கமாய் கட்டிபிடித்து...
வேகத் தடைகளுக்கு வேலையில்லாமல் செய்தாய்...

என் தோள் மீது உன் தாடையமைத்து...
என் காதுகளை பதம்பார்த்தாய்...
நானோ சாலைகளை தாண்டி வானில் பறந்து கொண்டிருந்தேன்...

திடீரென கருக்கொண்ட கார்மேகம் மழையை மண்ணில் பிரசவித்தது...
உன் துப்பட்டாவில்  நீ எனக்கு அடைக்கலம் கொடுத்திருக்க...
சாலையோர மரத்தடியில் தஞ்சம் அடைந்தோம்...

கடும் குளிரில் என் உடல் நடுங்க...
உன் இதழ் கொண்டு என் இதழ் பறித்து உடலெங்கும் சூடேற்றினாய்...
ஆவியான என்னுயிர் வானம் தாண்டி விண்ணில் மிதந்தது...

FouziyaFouzi விருப்பத்திற்காக
அவசர அப்டேட்... கான்செட், லாஜிக்கெல்லாம் பாக்க கூடாது... :p

அவளும் நானும்Where stories live. Discover now