பேரழகி பெண்ணொருத்தி

191 32 135
                                    

மன்னனை வாழ்த்தி பரிசில் பல கேட்கும் புலவனள்ள பெண்ணே...
உன் அழகைக் கவியாக்கி காதல் வரம் கேட்கும் கள்வன் நானடி கண்ணே...

கேளாயோ கிளியே...

பூக்கள் ஒன்றாகி தோற்றுப் போகும் உன் அழகின் முன்னே...
குயில்கள் இசை பாடி களைத்துப் போகும் உந்தன் குரலின் முன்னே...

அழகோ...

காண்போரை உறைய வைக்கும் - உன்

குரலோ....

கேட்போரைக் கறைய வைக்கும்...

தித்திக்கும் தேனமுதில் ஊற வைத்த இதழ் அதுவா..?
பாலுக்குள் திராட்சையொன்று நீந்திச் செல்லும் கண்கள் அதுவா...?

மதி மயங்கச் செய்ததென்ன - தெரியாமல்
ஓடி வந்தேன் உந்தன் பின்னே...

முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையின்று உனை வளர்த்து பெருமை கொண்டது...

அழகில்...

உன்னிடம் தோற்று தினமும் வெட்கம் கொண்டு விடியும் முன்னே நிலவும் மாண்டது..

வானவில்லும் வண்ணம் இழக்குதே வெட்கத்தில் உன் கன்னம் சிவக்கவே..

எண்ணங்களில் வண்ணம் தீட்டி இதழோவியம் உடலெங்கும் வரைந்திடுவேன் ஏராளம்

பாம்பைப் போல் படர்கொடியாய் உன் இடை சுற்றி வலம் வருவேன் நாள்தோறும்

நம்பிக்கை வாக்கெடுப்பை நம் இருவருக்குள் நடத்திக் கொண்டு
இரண்டு வாக்கு வித்தியாசத்தில் இறுதியில் நானே வென்றிடுவேன்
இரவென்னும் தேர்தலிலே......😉😉

அவளும் நானும்Where stories live. Discover now