எப்படிச் சொல்வேன் என் காதலை

200 20 45
                                    

கானகத்தில் கண்கொள்ளா காட்சி-கண்டு கவிபாட காத்திருக்க
கன்னியவள் கண்முன்னே தோன்றி மறைந்தாள் கானல் நீராக

வந்த வேலை மறந்தவனாய், அவள் சென்றவழி காலடியைப் பின் தொடர்ந்தேன்.
எழில் கொஞ்சிடும் நீர்வீழ்ச்சி, நீண்டு வந்தவள் காலடியை முத்தமிட தவமிருக்குது போலும்.
முத்தமிட்டு மோட்சம் பெற்று முத்துக்களாய் சிதறிய துளிகள் மண்ணில் வீழ்ந்தன விண்ணைத் தொட.

சேற்றிலொரு செந்தாமரை போல்
காட்டிலொரு பெண்தாமரையே...
மூச்சு விடும் முள்ளைக் கொடியே...
தொட்டால் சினுங்கும் பட்டுப் புழுவே...
காட்டழகை உன் கட்டழகால் தோற்க்கடித்தவளே...
உன் பாதம் தொட்டு பஞ்சாய் தெரித்த நீர்த்துளியுள் என் உயிர்த்துளியும் ஒருதுளியென நான் எப்படிச் சொல்வேன்.

சந்திரனின் ஒளியெதனால் அது சூரியனால்.
அந்தச் சூரியனின் ஒளி இவளின் கண்களினாலோ..?
ராகங்களின் பிறப்பிடம் எதுவோ
குழந்தை போலவள் கொஞ்சிப் பேசிடும் குரல்வளை அதுவோ..?

கரும்பருத்தி கூந்தலதுவா...?
செம்பருத்தி செவ்விதழதுவா..?
பச்சரிசி பல் வரிசையதுவா..?
வெற்றிலைக் கொடியிடை யதுவா..?
வெள்ளரிப் பிஞ்சு விரலதுவா..?

காதல் பற்றிழந்த என் நெஞ்சில்
நெருப்பைப் பற்ற வைத்ததெதுவோ...?

அவளும் நானும்Where stories live. Discover now