என் இதயம்...

171 34 56
                                    

இரும்பல்ல என் இதயம்...
உன் காந்தப் பார்வையில் அதைக் கவர்ந்திழுக்க...

மானல்ல என் இதயம்...
நீ காதல் கொண்டு அதை வேட்டையாட...

கல் அல்ல என் இதயம்...
உன் சிரிப்பில் உடைந்து நீர் ஊற்றெடுக்க...

பூவல்ல என் இதயம்...
உன் பிரிவால் வாடி உயிர் துறக்க...

மெழுகல்ல என்ன இதயம்...
உன் கோபத் தீயில் உருகிவிட...

இருந்தும் உனையே நினைத்திருக்கும்...
இறுதி மூச்சு வரைய் யது துடித்திருக்கும்...

அவளும் நானும்Where stories live. Discover now