💖1💖

13.2K 215 28
                                    
மார்கழி பணி படர்ந்த அந்த காலை நேரத்தில் குளிர் பிரதேசம் போல் காட்சி தந்தது சென்னை

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

மார்கழி பணி படர்ந்த அந்த காலை நேரத்தில் குளிர் பிரதேசம் போல் காட்சி தந்தது சென்னை.
அந்த காலை நேரத்தில் வெளியே போக பயந்து கொண்டு சிலர் போர்வைக்குள் சுகமாக உறங்க சிலர் பரபரப்பாக அந்த குளிரிலும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

பெசன்ட் நகரில் பணக்காரர்கள் மட்டுமே வாழும் அந்த தெருவில் அரண்மனையை போல் காட்சி அளிக்கும் அந்த பங்களாவில் அனைவரும் ஒரு விதபதற்றத்துடனும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

அதை அமைதியாக பார்த்தபடி காபி அருந்தி கொண்டிருந்தார் குடும்ப தலைவரான ராஜேந்திரன்.

அவர் மனைவி விசாலாட்சி அங்கு வேலை செய்யும் கமலாவிடம் அன்றைய சமையலை பற்றி தவறு விருந்தை பற்றி கூறி கொண்டிருந்தார்.

அவர்களின் இளைய மகள் யாழினி குட்டி போட்ட பூனை போல் வாசலுக்கும் ஹால்க்கும் நடந்து கொண்டடிருந்தாள்.

அதை பார்த்த ராஜேந்திரன் சிரித்துக் கொண்டே "இப்போது நீ நடப்பதால் மட்டும் உன் அண்ணன் வர வேண்டிய விமானம் 8 மணிக்கு பதில் 7 மணிக்கு வந்துவிடுமா" என்று கேட்க

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

அதை பார்த்த ராஜேந்திரன் சிரித்துக் கொண்டே "இப்போது நீ நடப்பதால் மட்டும் உன் அண்ணன் வர வேண்டிய விமானம் 8 மணிக்கு பதில் 7 மணிக்கு வந்துவிடுமா" என்று கேட்க

"போங்க டாடி" என்று சிணுங்கினாள் மகள்.

ஆம் அந்த வீட்டில் ராஜ குமாரன் போல் போற்றபடும் வீட்டின் வாரிசான விக்கிரமராஜா 3 வருடங்களுக்கு பிறகு கனடாவில் இருந்து தாய் நாடு திரும்புகிறான்.

விக்ரமின் வேதா 💖Donde viven las historias. Descúbrelo ahora