💖15💖

4.5K 217 34
                                    

அழகாக ஆரம்பித்த அந்த நாள் மிகவும் கொடூரமாக முடிந்தது

குழந்தையை இன்குபேட்டரில் ஆப்ஷர்வேசனில் இருக்க வேண்டும் என்றும் அங்கேயே குழந்தை பிறந்த மற்றவர்களிடமிருந்து தாய்ப்பால் எடுத்து தற்பொழுது அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்பதாலும் அனைவரும் மனமின்றி அந்த குழந்தையை விட்டுவிட்டு சம்யுக்தாவின் பூத உடலோடு வீட்டிற்கு சென்றனர்

அழுது அழுது மரத்துப் போனவர்கள் அமைதியாக இருந்து மீண்டும் அவளை பார்த்து மறுபடி அழுதபடி இருந்தனர்

செய்தியை அறிந்த உறவினர்கள் அவர்களுக்கு முன்னே அவர்கள் வீட்டில் சூழ்ந்திருக்க சம்யுக்தாவின் உடல் அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டது

சிறிது நேரத்தில் அனைவரும் அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் பட்டுப்புடைவை நகையுடன் இருந்ததால் உடையை மாற்ற செல்ல

சம்யுக்தாவை வெறித்துப் பார்த்தபடி நின்ற வேதாவை அவளுடைய ஒன்றுவிட்டு அத்தை சமாதானப்படுத்தி சம்யுக்தாவின் அறையில் இருந்த குளியலறையில் விட்டு விட்டு சென்றாள்

ஷவரை திறந்து நின்றவள் தன் கழுத்தில் இருந்து தண்ணீர் சிவப்பு நிறத்தில் மாறுவதை பார்த்து அதிர்ந்து விழித்தவள் சம்யுக்தாவின் கழுத்தில் அடிப்பட்டு இருந்த காரணத்தால் அவளுடைய தாலிச்சரடிலும் அந்த இரத்தம் உரைந்து இருந்தது இப்பொழுது தண்ணீரில் நிற்கவும் கரைந்து போவதை நினைத்து மறுபடி கதறி அழுக ஆரம்பித்தாள்

வேகு நேரமாக அழுது கொண்டிருந்த அவளை அவளின் தன் ஒன்று விட்டு அத்தை கதவை தட்டி அழைக்கவும் வெளியே வந்து சம்யுக்தாவின் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழே சென்றாள்

வேகு நேரமாக அழுது கொண்டிருந்த அவளை அவளின் தன் ஒன்று விட்டு அத்தை கதவை தட்டி அழைக்கவும் வெளியே வந்து சம்யுக்தாவின் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழே சென்றாள்

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.
விக்ரமின் வேதா 💖Onde histórias criam vida. Descubra agora