💖14💖

5.2K 198 61
                                    


முழுவதுமாக டைப் செய்து முடித்தவன் அதை ஒருமுறைக்கு பலமுறை படித்துப் பார்த்தான்

" ok fine நீ யாரு என்னன்னு சொல்ல வேணாம் இதனால் நான் உன்ன லவ் பண்றேன் னு நினைக்க வேண்டாம் நீ என்ன அப்ரோச் பண்ண  விதம் வித்தியாசமா இருக்கு அதனால நானும் சேட் கண்டின்யூ பண்றேன் பட் ஒன் கண்டிஷன் எனக்கு எப்போ இதுல சலிப்பு வந்தாலும் சரி இல்ல பிடிக்கலன்னாலும் சரி அப்போ உன்ன பத்தி விவரம் கேட்டா நீ மறுக்காமல் சொல்லணும் டீல் ஓகேவா?" என்று டைப் செய்ததை அவளுக்கு அனுப்பினான்

சிறிது நேர அமைதிக்குப் பிறகு "ஓகே டன்"என்ற பதில் வந்தது

அன்றிலிருந்தே காலையில் குட்மார்னிங்கில் ஆரம்பித்து குட்நைட்டில் அவளுடைய சாட் முடியும் பலதடவை அவன் சாப்பிடுவதற்கு மறந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அவளுடைய மெசேஜ் டோன் மட்டுமே அவனை சாப்பிடுவதற்கு நினைவூட்டும்

ஆரம்பத்தில் அவர்கள் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை குட் மார்னிங் குட் நைட் சாப்பிட்டாச்சா என்பதுபோல் மெசேஜ் அதுவும் அவள் மட்டுமே அனுப்புவாள்

இரண்டு மாதம் கழித்து காலையிலிருந்து அவன் எப்பொழுதும் எழுந்து கொள்ளும் பொழுதே வரும் குட்மார்னிங் காணாததால் குழப்பமடைந்தான் தானாக அனுப்புவதற்கும் தன்னுடைய ஈகோ தடுக்க ஆபீசுக்கு கிளம்பி விட்டான்

மதியம் 12 மணி வரை பொறுத்து பார்த்தவன் மெசேஜ் வராததால் மொபைலை எடுத்து ஹாய் என்று அனுப்பினான் ஆனால் அது டெலிவரி ஆகாமல் ஒரே ஒரு டிக் மட்டும் காண்பிக்க அவனுக்கு டென்ஷன் மேலும் அதிகமானது

கால் செய்யலாம் என்று யோசித்தவன் அவளுடைய சூழ்நிலை தெரியாமல் பண்ணுவது தவறு என்று அதை தவிர்த்தான்

இரவு வரை அவளிடமிருந்து எந்த மெசேஜும் வராததால் அந்த டென்ஷனில் அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுந்தான்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now