💖19💖

5.8K 236 112
                                    

      🎄 Merry Christmas dears 🎄

Sry for the delay 😣and thank u sooo much for yr supporting dears🤗 indha update konjam perisa potruken so pls padichitu unga comments sollunga
💖 pidichirundha vote pannunga😁😇🤗 ok nama story kulla polama😁

காலை வேளையில் அந்த தோட்டம் எப்பொழுதும் போல் மிகவும் ரம்யமாக இருந்தது ஆனால் அதை ரசிக்கக்கூடிய மனநிலையில் யாழினி இல்லாததுபோல் தன்னுடைய புடவை முந்தானையை திருகுவதும் பின்பு அதை விடுவிப்பதுமாக அங்குள்ள பெஞ்சின் மேல் அமரந்திருந்தாள்

பின்பக்கமாக வந்த அஜய் அவளுடைய கண்களை மூடினான்

"இவன் வேற நேரம் காலம் தெரியாமல்" என்று மனதினுள் சலித்தவள் பட்டென்று அவன் கை மீது ஒன்று போட்டாள்

"ஆ... " என்று அலறியவன் "ராட்சசியாடி நீ?" என்று கேட்டுக்கொண்டே அந்த பெஞ்சை சுற்றிக்கொண்டு அவளுடைய பக்கத்தில் அமர்ந்தான்
அவனை முறைத்தவள் "உங்க கிட்ட தனியா பேச நான் எவ்வளவு பாடுபட வேண்டியதா இருக்கு" என்று சலித்துக் கொள்ள

அவன் கண்களில் பல்ப் எரிந்தது "நான் எதிர்பார்கவே இல்ல பேபி இவ்ளோ சீக்கிரம் இது நடக்கும்னு" என்று கூறிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு அவளை நெருங்கினான்

அவனை யாழினி ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே "என்ன எதிர் பார்கல?" என்று புரியாமல் கேட்டாள்

"அது...." இன்னும் அவளிடம் நெருங்கியவன் "இந்த மாதிரி நீ என்ன மீட் பண்ணனும்னு கேட்பனு" என்று மெதுவாக வெட்கப் பட்டுக் கொண்டே தலையை குனிந்தான்

"இவன் இப்போ என்ன பண்றான்"? என்று புரியாமல் சற்று நகர்ந்து அமர்ந்து அவனுடைய முகத்தை பார்த்தவள் பின்பு அவன் கூறியதை புரிந்துகொண்டு தலையில் அடித்தவள்

"ரொம்பதான் வழியிது" என்று கழுத்தை நொடித்தாள்

"ஒய் பேபி" என்று அவன் கேட்கவும்

"நான் ஒன்னும் உங்களை ஆசையோட கூப்பிடல" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறவும்

"ஆசையா இல்லையா?" என்று அவன் பாவமாக கேட்க

"அதெல்லாம் ஒன்னும் இல்லை" என்று கூறிவிட்டு எதற்காக என்பது பற்றி கூற ஆரம்பித்தாள்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now