💖10💖

4.8K 231 15
                                    

அந்த நாளிற்கு பிறகு விக்ரமிற்கும் வேதாவிற்கும் ஒரு புரிதலும் ஒரு நட்பும் ஏற்படத் தொடங்கியது

சில பல குறும்புகளும் செல்ல சண்டைகளும் ஆக அந்த வாரம் செல்ல அவள் எதிர்பார்த்த அந்த வெள்ளிக்கிழமை வந்தது

இரண்டு நாளும் அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்வதற்காக விக்ரம் காலையில் சீக்கிரமாகவே கிளம்பினான்

அழகாக தர்ஷினியை கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த வேதாவை ரசித்தவன் அவளை எழுப்ப மனமில்லாமல் சொல்லாமல் சென்றால் ஏற்படும் விளைவை யோசித்து ஒரு பேப்பரில் "ஆபிஸில் நிறைய வேலை இருக்கு சோ ஈவினிங் சீக்கிரமா வந்துட்ரேன் சமத்தா கிளம்பி இரு... பை... டேக்கேர்"என்று எழுதி அதை ஒரு சாக்லெட்டில் சுருட்டி வைத்து விட்டு கிளம்பிச் சென்றான்

அலாரம் அடித்த பிறகு எழுந்த வேதா அவனை காணாமல் அவன் விட்டுச் சென்ற கடிதத்தை எடுத்துப் படித்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது

பின்பு எழுந்து காலேஜுக்கு சென்றவள் எதற்கு அலைச்சல் என்று தர்ஷினியை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றாள்

மதியம் வந்தவள் தர்ஷினி உடன் சிறிது நேரம் விளையாடி விட்டு மாலை நேரம் வரும் பொழுது தன் வீட்டுக்கு செல்ல மூன்று பேருடைய ஆடைகளையும் சூட்கேசில் வைத்தாள்

சூட்கேசை ஒரு முறை சரி பார்த்த பின் தர்ஷினியை தூக்கி கொண்டு ஹாலிற்க்கு வந்தாள்

அப்போதுதான் யாழினி காலேஜிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தாள் "என்ன கிளம்பியாச்சா? என்று கேட்டவளிடம்

"இன்னும் டிரஸ் மட்டும் சேஞ்ச் பண்ணனும் தர்ஷுவ ரெடி பண்ணணும் நீயும் வா சொன்ன ஓவரா பண்ற" என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் அவளிடம்

"இதுல என்ன இருக்கு வேதா நீ போய்ட்டு ஜாலியா இருந்துட்டு வா நாம எப்பவும் போற இடம் தானே இந்த டைம் உன் புருஷன் கூட போற ஸோ நான் வரல பா" என்று கூறி சிரித்தாள்

விக்ரமின் வேதா 💖Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ