💖2💖

5.9K 372 21
                                    

அவன் அமைதியோடு நின்றது சில நொடிகளே  பின்பு தன்னை சுதாரித்துக் கொண்டு  அவர்களை நோக்கி நடந்தான்
ஆனால் அவர்களோ அவனைக் கவனிக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன்  "இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க"  என்று கோபமாக கேட்டான்

அந்த சத்தத்தில் அதிர்ந்து திரும்பிய இருவரும்  அவனைப் பார்த்த உடன் மகிழ்ந்தனர் 

"ஹாய் மாம்ஸ்" என்று வேதாவும்

"அப்பா" என்று தர்ஷூவும் அவனை நோக்கி ஓடினர்

தர்ஷியை கண்ட அவனுடைய முகம் கனிந்தது மூன்று வருடங்களாக  அதாவது அவள் பிறந்த கையோடு கனடா சென்றவன் இன்று தான் அவளைப் பார்க்கிறான்.

அவள் "அப்பா..." என்று ஓடி வந்து அவனை கட்டிக்கொண்டாள்  அவளின் பாசத்தை உணர்ந்த அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. 

எல்லாம் வேதா "மாம்ஸ்" என்று கூப்பிடும் வரைதான் அவள் அப்படிக்கூப்பிடவும்
மறைந்திருந்த கோபம் மறுபடி அவனுக்கு வந்தது

"உன்னை யாரு இங்க வர சொன்னது  நான் தான் யாரையும் வரவேண்டாம் என்று கண்டிப்பா சொல்லி இருந்தேன்ல
கூடவே இவள வேற காலையிலேயே  அலையவிட்ர"
என்று தர்ஷினியை காட்டியபடி கூறினான் 

உடனே வேதா "இல்ல மாம்ஸ் நான் மட்டும் தான் வர மாதிரி ப்ளான் பண்ணேன் ஆனா நைட்  புல்லா  தொல்லை பண்ணி விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டு உடனே நானும் வருவேன் அப்படின்னு அடம் பிடிச்சுகிட்டு என்கூட வந்துட்டா"

அதை கேட்டவன் "உன்ன மொதல்ல இங்க யாரு வர சொன்னா  வீட்ல நான் அவ்வளவு சொல்லியும் உன்ன எதுக்கு அனுப்பினாங்க"  என்று கேட்க

அதற்கு வேற என்ன சொல்லலாம் என்று முழிக்கும் போதே
தர்ஷூ  "அப்பா நாங்க வந்தது யாதுக்கும் தெதியாது" என்று மழலையில் கூறினால்

"அடியே தர்ஷி" என்று அவளை முறைத்தபடியே "அது இல்ல மாமா இத்தனை வருஷம் கழிச்சு வரீங்க சும்மா ரிசிவ் பண்ணலாம் என்று  ஹி ஹி...."

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now