💖23💖

21.8K 464 463
                                    

காலையில் கண் முழித்த விக்ரம் வேதாவையும் தர்ஷினியையும் காணாமல் ஆச்சரியப்பட அவன்அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவன் துள்ளிக் கொண்டு எழுந்தான் மணி எட்டு என்று காட்டிக்கொண்டிருந்தது

"எப்படி இவ்வளவு நேரம் தூங்கினோம்?" என்று குழம்பியவன் வேக வேகமாக கிளம்பி கீழே சென்றான்

கீழே அவன் கண்ட காட்சி வேதாவும் தர்ஷினியும் கிளம்புகிறேன் என்று வழக்கம்போல் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க இந்தமுறை வித்யா வேதாவை அடக்குவதற்காக "அடங்காப்பிடாரி அங்க தான் அப்படி பண்ணுவேன்னு பார்த்தால் இங்கேயும் காலேஜ் கிளம்புறதுக்கு இப்படி எல்லோரையும் இந்த பாடு படுத்தற ஸ்கூல் பிள்ளையா இருக்கும் பொழுது சரி இப்போ ஒரு பிள்ளைக்கு அம்மாகிட்ட இன்னும் இது மாதிரி பண்ணா எப்படி?" என்று திட்டவும்

அதை வேதா வழக்கம்போல் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எந்த பொருளை எங்க வச்சேன்னு தெரியலையே இதுக்குதான் முன்னாடி நாளே எடுத்து வைக்கிறது ...ஏதோ நேத்து கொஞ்சம் லேட் ஆயிடுச்சு இதுக்குமேல எப்படி எடுத்து வைக்கிறதுனு போனது தப்பாப் போச்சு.." என்று புலம்பிக் கொண்டு தன்னுடைய பொருட்களைத் தேடி எடுத்து தன் பையினுள் வைக்க ஆரம்பித்தாள்

கூடவே யாழினியும் உதவி கொண்டிருக்க தர்ஷினி தன்னுடைய பையில் திருட்டுத்தனமாக இரண்டு சாக்லெட்டுகளை ஒளித்து வைத்து கொண்டிருந்தாள்

அதை பார்த்து விட்ட விக்ரம் "ஹாஹா நம்ம பொண்ணு அப்படியே வேதாவோட ஜெராக்ஸ் காப்பி ..... எப்படி அவ ஒரு மார்கமா திருட்டு முழி முழித்து எல்லா வேலையும் பண்றாளோ அதேமாதிரி பண்றா" என்று திட்டுவதற்கு பதில் மனதுக்குள் சிரிக்க ஆரம்பித்தவன் எதையும் கண்டுகொள்ளாதவன் போல் கீழே இறங்கி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்

 எப்படி அவ ஒரு மார்கமா திருட்டு முழி முழித்து எல்லா வேலையும் பண்றாளோ அதேமாதிரி பண்றா" என்று திட்டுவதற்கு பதில் மனதுக்குள் சிரிக்க ஆரம்பித்தவன் எதையும் கண்டுகொள்ளாதவன் போல் கீழே இறங்கி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now