💖9💖

5.1K 231 44
                                    

முதன்முதலாய் அவனுடைய அணைப்பு அவள் உள்ளே ஏதோ ஒரு கிறக்கத்தை உண்டாக்கியது

என்றும் படுத்தவுடன் உறங்கும் அவளோ இன்று இரவு தன் உறக்கத்தை மறந்தாள்

இரவில் தனக்குத்தானே பேசிக்கொண்டு விக்ரமை அன்று இரவு மட்டும் ஒரு ஆயிரம் முறைக்கு மேல் பார்த்து ரசித்து அவன் தலை முடியை கோதிக்கொண்டு ஏதேதோ செய்து கொண்டிருந்தாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இரவில் தனக்குத்தானே பேசிக்கொண்டு விக்ரமை அன்று இரவு மட்டும் ஒரு ஆயிரம் முறைக்கு மேல் பார்த்து ரசித்து அவன் தலை முடியை கோதிக்கொண்டு ஏதேதோ செய்து கொண்டிருந்தாள்

தனக்குத் தானே பேசிக்கொண்டாள் "வேதா குட்டி உனக்கு என்னடா ஆச்சு டைம் ஆகுது தூங்கு" என்றவள்

வழக்கம்போல் அவளுடைய பாதி உடலை அவன் மீது போட்டு அவனை அணைத்துக் கொண்டு கண் மூடினாள்

இவ்வாறு அவ்விரவு போக தன்னை அறியாமல் விடியற்காலை துவக்கத்தில் கண்ணயர்ந்தாள்

காலையில் அலாரம் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்த விக்ரம் "வேதா அலாரம் அடிக்குது பார்" என்று கண்ணை மூடிக் கொண்டே கூறினான்

பொதுவாக சிலருக்கு யார் எழுப்பினாலும் எழுந்துகொள்ள முடியாது போதிலும் அவர்களுடைய அலார சத்தத்தைக் கேட்டால் எப்பேர்பட்ட தூக்கத்திலிருந்தும் விழித்து விடுவார்கள் அதற்கு நம் வேதாவும் விதிவிலக்கல்ல

அலாரத்தை ஆப் செய்தவள் விக்ரமை தொந்தரவு செய்யாமல் மெதுவாக அவனை தாண்டி கீழே இறங்க அவள் கையை பிடித்தவன் "எங்கடி போற? என்று கேட்க

தலையை குனிந்து கொண்டு வெட்கப்பட்டுக்கொண்டே "காலேஜுக்கு கிளம்பனும்" என்றாள்

தூக்க கலக்கத்தில் அவளுடைய வெட்கத்தைக் கவனிக்காதவன் "பாருடா" என்று ஆச்சரியப்பட்டு அவள் கையை விட்டான்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now