💖18💖

5.2K 257 60
                                    

இமைகளை அசைத்தவள் மெதுவாக கண்களைத் திறந்தாள்

அவளின் இமைகள் அசைவதை பார்த்தவன் "ஐயோ போச்சு சும்மாவே சாமியாடுவா இப்ப என்ன பண்றதுனு தெரியலயே" என்று அவன் பதறிய நேரம் அவள் கண்களை முழுவதுமாக திறந்தாள்

திறந்தவள் அவனை பார்த்து சிரித்தவாறே "எப்ப பாரு முழிச்சுட்டே இருப்பியா மாம்ஸ் தூக்கமே வராதா? எப்பவுமே ஹாப்பியா இரு மாம்ஸ்" என்று கூறிவிட்டு உதட்டை முத்தம் கொடுப்பது போல் குவித்து காட்டிவிட்டு திரும்பவும் கண்களை மூடி விட்டாள்

அவள் கண்களை திறந்த உடனே அவனுக்குள் இருந்த உணர்ச்சி அனைத்தும் பயத்தால் எங்கேயோ போய் ஒளிந்து கொள்ள இவன் அவ்வளவு நேரமும் மூச்சுவிட மறந்தவன் போல் பெரிய மூச்சை விட்டான்

மெதுவாக அவளைக் கட்டிலில் கிடத்தியவன் "இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தூக்கத்துல உளறினாளா? "

"இதுக்கு மேல ரிஸ்க் எடுக்கக்கூடாது" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டே கட்டிலில் படுத்தான்

எப்பொழுதும் போல் படுத்தவுடன் தன்னுடைய பெட்ஷீட்டை தேடியபோதுதான் கவனித்தான் அவன் அவளை பெட்டின் மீது படுக்க வைத்த பொழுது கவனிக்காமல் அதன் மேல் படுக்க வைத்ததை

இதற்கு மேல் அதை எடுத்தால் எங்கே எழுந்து கொள்வாளோ என்று அப்படியே தூங்கி விட்டான்

********

நடந்து முடிந்த கூத்தை எல்லாம் பார்த்து சிரித்தவாறே நிலாமகள் சென்றுவிட இனி நடக்கப் போவதை பார்ப்பதற்காக சூரியன் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக தன் ஒளியை பரப்பினான்

காலையிலேயே குளித்து முடித்து பூஜை செய்த விசாலாட்சி தன் மகள் யாழினியை தேடி அவளுடைய அறைக்கு சென்றார்

போகும் வழியில் "இவளையெல்லாம் சும்மாவே எழுப்ப முடியாது சனி ஞாயிறுனா நமது உயிர் போய்டும்" என்றபடி கதவைத் திறந்தவள் வாயில் கை வைத்தபடி அதிர்ச்சியில் நிற்பது போல் நின்றாள்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now