💖8💖

5K 253 33
                                    

ஒரு நொடி தயங்கியவன் பின்பு வேக வேகமாக காரை ஆப் செய்து விட்டு கீழே இறங்கினான்

கதவைத் திறந்து இறங்கிய அவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது அங்கே யாரும் இல்லாமல் தோட்டம் அமைதியாக காட்சியளித்தது

வேக வேகமாக அங்கே சென்றவன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே எதேர்ச்சையாக வந்த வேதா "என்னாச்சு மாம்ஸ்" என்று கேட்க

"ஒன்றுமில்லை பை" என்றவன் ஒருவேளை இன்றைக்கு எல்லோரும் அவளைப் பற்றியே பேசியதால் இதுபோல் தோன்றி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே ஆபீசுக்கு சென்றான்

எல்லாம் அவனுடைய ஆபீசுக்கு சென்று அனைவருக்கும் குட் மார்னிங் கூறிவிட்டு அவனுடைய கேபினுக்கு செல்லும் வரை தான் அதற்குப் பிறகு அவனுடைய வேலைகள் அவனை உள்வாங்கிக்கொள்ள அனைத்தையும் மறந்தான்

இரண்டு மணி இருக்கும் பொழுது அவனுடைய பி.ஏ அர்ஜுன் உள்ளே வந்தான்

"சொல்லுங்க அர்ஜுன்"

"சார் நீங்க முக்கியமா அட்டன்ட் பண்ண வேண்டிய மூணு மீட்டிங் இருக்கு அத நாளைக்கு அரேஞ்ச் பண்ணிடட்டுமா? என்று கேட்க

வேதாவின் முகம் அவனுக்கு நினைவு வர "இல்ல அர்ஜுன் நாளைக்கு எனக்கு பர்சனல் வொர்க் இருக்கு" என்று யோசிக்க

"சார் இவங்க கிட்ட நம்மளுக்கு காண்ட்ரக்ட் கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம் இப்போ நாம அத தள்ளிப்போட்டா நம்மளுக்கு அது ஒரு பெரிய ட்ரா பேக் ஆயிடும் நீங்க கனடால இருந்தாலும் ஸ்கைப் மூலமாக இந்த மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்கலாம் ஆனா இங்க இருந்துகிட்டே அவாய்ட் பண்ண முடியாது சார்"

சிறிது நேரம் யோசித்தவன் "ஓகே அர்ஜுன் நாளைக்கே ரெடி பண்ணுங்க" என்று கூறினான்

ஐந்து மணி இருக்கும் பொழுது அர்ஜுனை அழைத்த விக்ரம் சீரியஸாக மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்

"சார்..." என்று அழைத்த அர்ஜுனிடம்

தன் தலையை மொபைலில் இருந்து நிமிர்த்தாமலேயே "விக்ரம் சின்சான் சாக்லேட் ஆன்லைன்ல எங்க கிடைக்கும்னு தெரியுமா? என்று கேட்க

விக்ரமின் வேதா 💖Donde viven las historias. Descúbrelo ahora