💖5💖

6.9K 287 7
                                    

பெரிய தோட்டம் அதனால் அங்கே அனைத்து மலர்ச் செடிகளும் பழ வகை மரங்களும் விசேஷ மரங்களும் இருந்தன

அந்த மாலை வேளையில் பறவைகள் கூட்டம் கீச்கீச் என்று கத்திக்கொண்டே தன் கூடுகளை அடையத் தொடங்கி இருந்தன

அது ஒரு ரம்மியமான பொழுது ஆனால் அதை ரசிக்க மனமில்லாமல் காலையிலிருந்து நிகழ்ந்த அனைத்தையும் யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம் "இந்த ஒரு நாளே இப்படி கண்ண கட்டுதே இனிமே எப்படி நாளை ஓட்ரது" என்று அடிக்கடி மனதால் புளம்பினான்.

ஒரு வாரம் நன்றாக ரெஸ்ட் எடுத்து தர்ஷினியுடன் நேரத்தை  செலவு செய்யலாம் என்று  நினைத்து இந்தியா வந்தவன் நாளை முதலில் ஆபீஸ் செல்ல வேண்டும் என்ற உறுதி மொழியை எடுத்தான்

திடீரென அவன் கண்களை ஒரு பிஞ்சு கைகள் மூடியது அவனுக்கு அது தர்ஷினியின் கைகள் என்று தெரிந்தும் வேண்டும் என்று "யாழினி தானே" என்றான் அதற்கு அமைதி பதிலாக வரவே

"அம்மாவா..."

"அப்பாவா...." என்று மாற்றி கேட்டான்

பின் தனது வீட்டின் நாய்குட்டி பூனை குட்டி பெயரைக்கூட விடாமல் கூறியவன் மறந்தும் வேதாவின் பெயரை கூறவில்லை

பின்பு தனது தோல்வியை ஒத்துக் கொண்டது போல "எனக்கு யாரென்று தெரியவில்லையே" என்று கூற

தர்ஷினி கைகளை விலக்கிக் கொண்டு "நான்தான்" என்று கைகொட்டி சிரித்தான்

அவளுக்கு அவ்வளவு பெருமை தந்தையை ஏமாற்றி விட்டது

அவன் தோட்டத்தில் இருந்த சேரில் அமர்ந்து இருந்ததால் அவன் பின்னே யாழினி தர்ஷுவை தூக்கி பிடித்து கொள்ள அவன் கண்களை மூடியிருந்தாள் தர்ஷினி

பின்பு யாழினி தர்ஷினியை தூக்கி கொண்டு வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்

தர்ஷினி  "அப்பா நீயும் வேதாவும் ஒதே மாதிதி ரெண்து பெதும் என்ன கண்தே பிதிக்க மாத்திங்க" என்று கைகொட்டி சிரித்தாள்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now