💖16💖

4.9K 199 70
                                    

சிறிது சிறிதாக தன்னுடைய பழைய நினைவுகளிலிருந்து மீண்டு கொண்டிருந்த விக்ரம் மீண்டும் தன் நிகழ்கால உலகத்திற்கு திரும்பி வந்தான்

ஆனாலும் அவனால் கையையும் காலையும் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை

தன் உடலினுள் பரவியிருந்த ஒரு விதமான குளிர் அவனை திகிலடைய செய்தது

அவன் தோளின் மீது பதிந்திருந்த கரத்திற்கு சொந்தமாணவர்களை பார்ப்பதற்கு அவன் மிகவும் முயற்சி செய்தும் அவனால் ஒரு அணுவும் தன் உடலை அசைக்க முடியவில்லை

அவனுடைய ஆழ்மனது அது சம்யுக்தா என்று கூற தன்னையும் அறியாமல் "சம்யூ..." என்று அழைத்தான்

அவனின் குரல் வெளியே வரவில்லை அவனால் பேச முடியவில்லை வெறும் காற்று குரல் மட்டுமே வந்தது

அவன் சம்யூ என்று அழைத்ததற்கு "ம் நான் தான் "என்று மட்டும் பின்பக்கத்திலிருந்து குரல் கேட்டது

மூன்று வருடங்களுக்குப் பிறகு சம்யுக்தாவின் குரலை கேட்டவனுடைய உடல் சிலிர்த்தது இன்னும் அவனால் தனக்கு நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை

இருந்தும் அவளிடம் பேச வேண்டும் என்ற துடிப்புடன் " எங்கள விட்டுட்டு ஏன் போயிட்ட சம்யு" என்று அதே காற்று குரலில் ஏக்கத்துடன் அவளிடம் கேட்டான்

"நான் எங்கேயும் போல இங்கேதான் இருக்கேன்" என்று பின்பக்கத்திலிருந்து பதில் வந்தது

"ஆனா என்னால உன்ன பார்க்க முடியலையே" என்று தவிப்புடன் கேட்டான்

அந்த குரல் அவனுக்கே சரியாக கேட்கவில்லை ஆனால் அவளுக்கு கேட்டது

"என்னை நீங்க பார்க்கணும் உணரனும் அப்படின்னு நினச்சா ஒரே ஒரு வழிதான் இருக்கு அது உங்களால் மட்டும் தான் முடியும்"

"நான் என்ன பண்ண முடியும்?" என்று குழப்பமாக கேட்டவனிடம்

"உங்களால மட்டும் தான் முடியும் மறுபடியும் நான் உங்க கூட வாழனும்னு ஆசைப்படறேன் அது நீங்க மனசு வெச்சா மட்டும்தான் முடியும்" என்று கூற

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now