💖17💖

5.4K 188 117
                                    

யாழினி ஹாய் என்று அனுப்பிய அடுத்த பத்து நிமிடத்தில் அஜயிடமிருந்து ரிப்ளை வந்தது

"என்னாச்சு எதனா ப்ராப்ளமா?' என்று பதில் அனுப்பினான்

"இவனுக்கு எப்படி ப்ராப்ளம் என்று தெரியும்" என்று யோசித்தவள் இருந்தும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல்

"ஏன் பிரச்சினை இருந்தால் தான் மெசேஜ் பண்ணுவாங்களா"? என்று கேட்டாள்

அவளுடைய ரிப்ளைவிலிருந்து அவளுக்கு பயப்படும் அளவு எந்த பிரச்சினையும் இல்லை என்று உணர்ந்தவன் "பின்ன என்ன ப்ராப்ளம்னாதானே பொண்ணுங்க பசங்களுக்கு மெசேஜ் அனுப்புவிங்க"? என்று பதில் அனுப்பினான்

அதுதான் உண்மை என்றாலும் அதை எப்படி அவன் கூறலாம் என்று நினைத்தவள்

கோபமாக ஸ்டிக்கர் போட்டுவிட்டு "எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல சாரி பார் த  disturbance" என்று அனுப்பிவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டாள்

"நானா போய் மெசேஜ் பண்ணேன்ல அதான் ரொம்ப திமிரா பேசுறான்" என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்க அவளுடைய மொபைல் ரிங்டோன் வெளியிட்டது

அவள் நினைத்த மாதிரியே அஜய் தான் கால் செய்தான் இரண்டு மூன்று அழைப்புகளை நிராகரித்தவள் பின்பு போனால் போகிறது என்று அட்டெண்ட் செய்து தன் காதில் வைத்தாள்

"பேபிமா ஏன் கோபப்படுற அது ஜஸ்ட் ஃபார் ஃபன் உன் மூஞ்ச பாரு கோபப்படும்போது  எப்படி செவந்து இருக்குன்னு" அவன் அப்படிக் கூறவும் தன்னையும் அறியாமல் தன் முகத்தை தடவிப் பார்த்தாள்

அதை அறிந்தவன் போல் "பாத்தியா எவ்ளோ சிவந்து போயிருக்கு" என்று அவன் கூறவும் முதலில் விழித்தவள் பின்பு அவன் கேலி செய்கிறான் என்பதை உணரவும்

"இப்போ எதுக்கு கால் பண்ணிங்க"? என்று கோபமாக கேட்கவும்

"சரி சரி சாரி போதுமா? எதுக்கு மெசேஜ் பண்ண? என்ன ஆச்சு சொல்லு" என்று கேட்கவும்

வேதாவையும் தன் அண்ணனின் வாழ்க்கையும் நினைத்து அவனிடம் சமாதானமாக பேசத் தொடங்கினாள் "நான் உங்கள மீட் பண்ணனும்"

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now