💖7💖

4.7K 222 16
                                    

கீழே சதாசிவம் தன் மனைவியை திட்டிக் கொண்டிருந்தார் அவர் பொதுவாக பொண்டாட்டிக்கு அடங்கிய கணவன் தான் ஆனால் தன் மகள்கள் என்று வந்தால் மட்டும் தாங்கிக் கொள்ள மாட்டார் அது தான் கட்டிய மனைவியே ஆயினும் அவள் தன் பெண்களை திட்டும் பொழுது "குழந்தைகள்தானே" என்றாவது தலையிட்டு வாங்கிக்கட்டிக் கொள்வார்

"இங்கப்பாரு வித்யா ஆயிரம்தான் இருந்தாலும் இப்ப அவ இந்த வீட்டு மருமக அவள அப்படி பேசுவது கொஞ்சம் கூட சரியில்ல சொல்லிட்டேன்"

"ஏங்க அவ மட்டும் பண்ணது" என்றவளை இடைமறித்தவர்

"என்ன அவ மட்டும் பண்ணது அவ அப்படி என்ன பண்ணா இந்த வீட்ல இதுவரைக்கும் அவளை ஒரு குறை சொல்லி நீ பார்த்து இருக்கியா? இப்போ உன்னோட பிரச்சனை என்ன அவ விக்ரம கவனிக்கல அதுதானே?
கல்யாணம் ஆன உடனே அவர் பாட்டுக்கு கனடா போயிட்டாரு அதோடு நேத்துதான் வந்து இறங்கி இருக்காரு அதுக்குள்ள அவளுக்கு எப்படி ஒரு ஒட்டுதல் வரும்? அவ பொய்யா  வேனா செய்யலாம் ஆனா நம்ம பொண்ணுக்கு அது வராது... பெரிய பொண்ணு காதலிச்சு கல்யாணம் பண்ணா.... ஆனா இவ நிர்பந்தத்தில் கல்யாணம் ஆனவ.... இப்பதானே விக்ரம் வந்திருக்கார் போகப்போக அவங்க ரெண்டுபேரும் ஒன்னா சேர்வாங்க..... நீ கவனிச்சயா தெரியல அவளை கொட்டிக்கருதிலேயே இரு அப்படின்னு கேட்டியே அவ என்ன சொன்னா அம்மா நானும் தர்ஷிணியும் போறோம்னு தான் சொன்னாள்..... எல்லாத்துக்குமே நேரம் ஒண்ணு இருக்கு வித்யா நம்ம ஆசைப்படுறது என்ன அவர் பழைய வாழ்க்கையை மறந்துட்டு இப்போ நம்ம பொண்ணு கூட சந்தோஷமா வாழனும்னு ஆனால் நீ அவர் இருக்கவே அவளை உயர்வாகவும் இவளை மட்டமாகவும் பேசுற... இப்படி அங்கிருந்து கிளம்பி வந்ததே அதுக்காகத்தானா?" என்று கோபமாக பேசி தலையில் கை வைத்தார்

அதுவரை கணவன் மனைவிக்கு இடையில் வராமலிருந்த விசாலாட்சி "விடுங்க அண்ணா இப்ப கவலைப்பட ஒண்ணுமே இல்ல சரி வாங்க நாம போய் சாப்பிடலாம்" என்று பேச்சை மாற்றினார்

"நான் போய் விக்ரம் வேதாவ கூட்டிட்டு வரேன் என்றவர் யாழினியிடம்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now