💖22💖

6.9K 261 226
                                    

அவன் குழப்பத்தில் இருந்தான் அவன் உடம்பில் குளிர் ஏற ஆரம்பித்தது..... அவனுக்கு அது சாதாரண குளிர் போல் தெரியவில்லை

"இது என்னடா குளிர் இப்படி ஒரு மார்கமா இருக்கு இப்போ என்ன செய்வது?" என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் தோளை நோக்கி ஒரு கை வரவும் அவனுடைய செல்போன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது

அதில் கலைந்தவன் திடீரென்று திரும்பிப் பார்க்கவும் யாரும் இல்லாமல் அமைதியாக அந்த தோட்டம் காட்சி அளித்தது "ஐயோ சாமி இது என்னடா இப்படி ஒரு ஃபீலிங்"என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனுடைய மொபைல் மறுபடியும் அழைக்க எடுத்து பார்த்தவன் தன் தாய் அழைத்ததால் யோசித்துக்கொண்டே அதை எடுத்து காதில் வைத்தான்

"அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? பனி பெய்யுது சீக்கிரம் உள்ளே வா" என்று அதட்டினார்

அவன் சமாளிப்பதற்காக "அது ஒன்னும் இல்லம்மா இதெல்லாம் கொஞ்சம் அரேஞ்ச் பண்ணிட்டு வரலாம்னு நெனச்சேன்" என்று கூறவும்

"ஆமா இவரு பெரிய சூப்பர்மேன் ஒரே ஆளா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு... நாளைக்கு சர்வன்ட்ஸ் விட்டு க்ளீன் பண்ணிக்கலாம் முதல்ல உள்ள வா" என்று கூறவும்

"சரி மாம்" என்று வழிந்தபடியே போனை வைத்தவன் அதுவரை அவனை விட்டு சென்ற குளிர் மறுபடியும்  பரவ ஆரம்பிக்கவும்

"ஐயோ இது என்ன பேய் பிசாசு படத்தில் வர மாதிரி இருக்கு" என்று மனசுக்குள் அலறியவன் வேகமாக வீட்டை நோக்கி சென்றான் இல்லை இல்லை ஓடினான்

சாதாரணமாகவே அஜய்க்கு இருட்டு என்றாலும் பேய் என்றாலும் சிறுவயது முதலிலிருந்தே பயம் அதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் அவன் தங்கைக்கும் தாய் தந்தைக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும்

அப்படி தெரிந்து இருந்தாலும் அவனை கிண்டல் செய்வதற்கு கூட அதை பற்றிஅவனிடம் பேச மாட்டார்கள்..... அப்படியே அவர்களையும் அறியாமல் ஏதாவது பேய் பற்றி பேசி விட்டால் உடனே அன்று இரவு முழுவதும் அவர்களுக்கு சிவராத்திரி தான் இதை அறிந்த அவர்கள் அவனிடம் இதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now