💖6💖

5.1K 179 7
                                    

யாழினி வேதா தர்ஷினி மூவரும் interest ஆக டிவி பார்த்துக்கொண்டிருக்க

அங்கே வந்த விசாலாட்சி வேதாவை அழைத்து அவள் கையில் கண்ணாடி டம்ளரில் இருந்த பாலை கொடுத்தார்

"எனக்கு வேண்டாம் அத்தை" என்ற அவளை

"இது உனக்கு இல்லை உன் புருஷனுக்கு" என்று கூற

அவள் அழாத குறையாக "அத்தை" என்றவள் "காலையில இருந்து அவருக்கும் எனக்கும் ஆகவே மாட்டேங்குது இப்போது பால் கொண்டு போனா அவ்வளவுதான்"

"அதெல்லாம் அவன் அப்படித்தான் இருப்பான் நீ தான் அவனை மாத்தணும்" என்று கூறியவர் தர்ஷினியை தன்னோடு வருமாறு அழைத்தார்

அவளோ "நான் வேதா கூத தான் இதுப்பேன்" என்று அடம் பிடித்தாள்

அதை பார்த்து வேதா "எதுக்கு அத்தை அவள உங்க கூட படுக்க சொல்றீங்க இவ கூட இருந்தாலும் இவ இருக்கிறாளே என்று மாம்ஸ் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் இவளும் இல்லைன்னா அப்புறம் ஒரே ரணகலம்தான்"

"இல்ல உங்க ரெண்டு பேருக்கும் தனிமை வேணும் என்று.. " யோசித்த விசாலாட்சியை பார்த்து யாழினியும் வேதாவும் ஒன்றுபோல் சிரித்தனர்

"அய்யோ அத்தை இவ இல்லாம நான் போனா மட்டும் அப்படியே உங்க புள்ள அப்படியே மயங்கிடுவார்.... ஆகுற வேலைய பாருங்க" என்று கூறிக்கொண்டு தர்ஷினியை தூக்கிக் கொண்டு சென்றாள்

யாழினி தன் படுக்கை அறைக்கு சென்று விட்டாள்.

படுக்கையில் அமர்ந்திருந்த விக்ரம் யோசனையாக அமர்ந்திருக்க அவர்கள் இருவரும் வரும் சத்தம் கேட்டது

"இவ கூட எப்படி படுகிறது" என்று யோசித்தவன் "தர்ஷினி நடுவில் படுக்க வைத்து விட்டு ஆளுக்கு ஒரு புறம் படுத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று முடிவு செய்திருந்தான்

ஆனால் சிறிது நேரம் ஆகியும் அவர்கள் உள்ளே வரவில்லை

இன்னும் என்ன செய்கிறார்கள் என்று என்று யோசித்தபடி இருக்கும் பொழுது அவர்கள் இருவரும் இரண்டு மூன்று சாக்லேட்டுகள் உடன் உள்ளே நுழைந்தனர்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now