நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

624 62 9
                                    

நாட்கள் நகர்ந்தன.

கடந்த 2 வாரங்களாக முல்லை அலுவல் நிமித்தம் காரணமாக கதிருடன் நிறைய நேரம் செலவிட முடியவில்லை.

கதிர் வருத்தத்துடன் முல்லையின் பிரிவை பற்றி யோசித்துக் கொண்டிருக்க ...முல்லை அவனை நோக்கி வந்தாள்...

முல்லையை பார்த்ததுடன் தன் வருத்தத்தை மறைத்து மெலிதாக புன்னகைக்க முல்லை அவனை கட்டிக்கொண்டாள்.

முல்லை: என்னாச்சு கதிர்....ஏன் இப்படி வருத்தமா இருக்கீங்க?

கதிர்:  அப்படி எல்லாம் இல்லடி?

முல்லை: சும்மா சொல்லாதீங்க? உங்கள பார்த்தாலே தெரியுது...

கதிர்: கொஞ்சம் யோசனை...அதான்...இன்னும் 5 days தான இருக்கு...அதவும் shopping கே பத்தாது...அதான்...

முல்லை: கதிர்...நானே உட்கார்ந்து யோசிச்சா அழுகை வந்திடும் னு தான் ஓடிட்டு இருக்கேன்...Pls...இப்படி face அ வைக்காதீங்க..அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமாகிடும்.நான் போகவே மாட்டேன் சொல்லிட்டேன்...

கதிர்: சரி விடு..நான் வருத்தப்படலை...

முல்லை: சீக்கிரம் வந்திடுவேன் சரியா கதிர்...

கதிர்: சரி...என்ன முகம் மாறுது?

முல்லை: அப்பா?

கதிர்: மாமாவுக்கு என்னடி...நான் இருக்கேன் ல....நீ நிம்மதியா போயிட்டு வா.. நான் பார்த்துக்கிறேன்...அம்மா இருக்காங்க... போதாதா?

முல்லை: போதும் கதிர்...என் செல்லம் நீங்க....நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை...உங்களை விட்டுட்டு இருக்கப்போறத நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு...

கதிர்: 6 months தானடி... சீக்கிரம் ஓடிடும்...

முல்லை: 6 months கதிர்...இந்த 2 weeks  ஏ எனக்கு ரொம்ப உங்களை miss பண்ண மாதிரி கஷ்டமா இருக்கு...எப்படி தான் 6 months தாங்க போறேனோ...

கதிர்: இங்க இருந்து கிளம்புறவங்க எல்லாரும் அதையே தான் சொல்லுவாங்க...அப்புறம் 6 yrs கழிச்சு கூட வரமாட்டாங்க...தெரியுமா உனக்கு....
அப்பறம் அங்கு போய் 1 week ல எல்லாம் stable ஆகிடும்..விடு..பெரிசா யோசிக்காத...நான் எங்க போக போறேன்...

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now