ஒளிக்கீற்று

673 62 2
                                    

கல்லூரி வளாகத்தில் பேருந்து நுழைந்தது.

கதிர் வேக வேகமாக பேருந்தை விட்டு இறங்கி விட்டான். செந்திலும், ஜோன்ஸ்ம் பின்தொடர்ந்தனர்.
ஜோ: மச்சி..இப்ப எதுக்கு இப்படி ஓடுற? உன்னால முல்லை இருக்கிற இடத்துல இருக்க முடியல? என்ன?
செந்தில்: Point மச்சி.இவன் அலப்பறை தாங்க முடியலை. நடிக்கிறான்.கேட்டா பெரிய lecture குடுத்து கடுப்பேத்துவான்.
கதிர்: உங்களுக்கு என்னடா வேணும்.
ஜோ: நீ முல்லை ய love பண்றேனு ஒத்துகிட்டு அவ கிட்ட போய் பேசு.அதான் வேணும்.என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்.
கதிர்: ஜோ..அது முடிஞ்சு போன விஷயம்‌.திரும்ப திரும்ப முல்லைய பத்தி பேசாதீங்க..
செந்தில்: டேய்...எதுடா முடிஞ்சு போன விஷயம்.நீ உன்னையும் ஏமாத்திகிட்டு எல்லாரையும் ஏமாத்திகிட்டு மனம் நொந்து சுத்துவ அத நாங்க பாத்துகிட்டு சும்மா இருக்கனுமா? மனசுக்குள்ள அவ மேல காதல் இல்லைனு முல்லை மேல சத்தியம் பண்ணு பார்க்கலாம்?
கதிர்: கடுப்பேத்தாம வாங்கடா..இனிமே இந்த விஷயத்தை பத்தி எங்கிட்ட பேசாதீங்க‌...காலையிலேயே mood off பண்ணாதீங்க..அப்புறம் நல்லா வாங்கி கட்டிக்குவீங்க..
ஜோன்ஸ்: இந்த வெட்டி திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..எங்களுக்கு தான் மனசு வலிக்குது.
செந்தில்: கதிரு..நீ ஒரு நாள் அவளை miss பண்ணிட்டேனு எங்ககிட்ட வந்து நிப்படா? அன்னைக்கு இருக்குடா உனக்கு கச்சேரி.
கதிர்: அதை அன்னைக்கு பார்க்கலாம் வா.இப்ப HOD அ பார்க்கனும் வா late ஆகிடுச்சு.வேகமா நட.
--------------------------------+++---------------------------
தர்ஷ்: என்னடி off ஆகிட்ட..விடுடி பார்த்துகலாம்.
முல்லை: பார்க்கிறதுக்கு என்ன இருக்கு..என் மூஞ்சிய பார்த்து பேச கூட என் மாமாவுக்கு வெறுப்பாகிடுச்சு என்ன? Escape ஆகி ஓடுறாங்க..தப்பு பண்ணிட்டேன்டி.இந்த college la சேர்ந்து இருக்ககூடாது.
தர்ஷ் : ஏண்டி...நாங்கெல்லாம் உனக்கு இல்லையா?
முல்லை:சரி தாண்டி...எனக்கு நீங்களே போதும்..
வா தர்ஷ். Canteen க்கு போய்ட்டு class க்கு போலாம். Missed call ஆ குடுத்து தள்றாளுக?
(கேண்டீனில் முல்லையின் சிநேகிதிகள் ஊர்மிளா மற்றும் சௌமியா)
ஊர்மிளா: wow. முல்லை..செமயா இருக்கடி.. Miss u. எவ்வளவு call பண்றது...
முல்லை: (உற்சாகத்துடன்)என்னங்கடி..காலையிலேயே cafeteria la மாநாடு போல..
சௌமி: முல்லை..Congrats di..
முல்லை: எதுக்குடி சௌமி..
சௌமி: college க்குள்ள போலயா நீ? நீ தாண்டி first year topper.. நம்ம group all pass di.
முல்லை: நிஜமாடி? நான் எதிர் பார்க்கவே இல்லைடி.
தர்ஷ்: முல்லை congrats...அப்ப இன்னைக்கு உன் treat தாண்டி.
(முத்து அண்ணன் 2 மசால் தோசையும்..2 omlette ம் போடுங்க)
முல்லை: ஆத்தி ஆரம்பிச்சுட்டாளே..இருங்கடி காசு இருக்கானா பாத்துக்கிறேன் first.
அதே வேளையில் ஜோன்ஸூம்,செந்திலும் கேண்டினை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தர்ஷ் (மனதில்) : இங்கயும் வந்துட்டாய்ங்களா..இனி இவ Treat வச்ச மாதிரி தான்.
முல்லையை பார்த்ததும் நேராக அவர்கள் table க்கு வந்து விட்டனர்.
ஜோன்ஸ்: முல்லை congrats பா..இப்ப தான் notice board பார்த்தோம். So
happy.
முல்லை: Thanks Jones அண்ணா.
செந்தில்: செம முல்லை.அடிச்சு தூள் பண்ணிட்ட போ? என்ன treat ஆ...எங்களுக்கு எல்லாம் இல்லையா?
ஊர்மி: செந்தில் அண்ணா அவ இரண்டு பேரா வந்தாலாம் தர மாட்டா..போய்ட்டு 3 ஆ வாங்க..அப்பத்தான் நடக்கும்..
செந்தில்: சிரித்துக்கொண்டே அவன் HOD அ பார்க்க போய்ட்டான் மா...
முல்லை: ஊர்மி..சும்மா இரு..உங்களுக்கு நான் நாளைக்கு கண்டிப்பா தருவேன் செந்தில் அண்ணா...
செந்தில்: என்னைக்கு எப்படி treat வாங்கனும் எங்களுக்கு ஒரு கணக்கு இருக்கு முல்லை...என்னடா ஜோன்ஸ்..
ஜோன்ஸ்: Exactly மச்சி..
Jonesம் செந்திலும் cafeteria உள்ளே சென்றுவிட்டனர்.
முல்லைக்கு அவர்களின் பூடகமான பேச்சு ஓரளவுக்கு புரிந்தது..ஆனால்
கதிரை வருவான் என்று எதிர்பார்த்தாள். ஏமாற்றத்துடன் cafeteria விட்டு கிளம்பினாள்.
சரியாக அவர்கள் கிளம்பி சென்ற 5 வது நிமிடம் கதிர் cafeteria நோக்கி வந்து கொண்டிருந்தான்.
கதிர்: என்னடா? Order பண்ணிட்டீங்களா?
செந்தில்: கதிரு..இன்னைக்கு உன் treat தான்.
கதிர்: எதுக்குடா?
ஜோன்ஸ்: மச்சி முல்லை தாண்ட first year topper.இப்ப தான் Notice board la பார்த்துட்டு வரோம்.
மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே கதிருக்கு தெரியவில்லை.சட்டுனு எந்திருச்சு...அண்ணா..என்ன sweet இருக்கு..டக்குனு 2 கிலோ குடுங்க..
செந்தில்: ஜோ..பாத்தியாடா இவன? இப்ப வந்து நம்ம கிட்ட scene போடுவான்‌ பாரு...இன்னைக்கு இருக்குடா...
கதிர்: டேய். செந்தில்‌..முல்லை class mate பிரணவ்...அவனை call பண்ணி வரச்சொல்லு..
செந்தில்: எதுக்கு?
கதிர்: இந்த sweet அ அவன் class க்கு குடுக்கச் சொல்லுடா?
செந்தில்: என்ன காரணம் சொல்லனும்?
கதிர்: அவன் வீட்டு Housewarming அப்படி இப்படினு ஏதாவது சொல்ல சொல்லுடா?
செந்தில்: எங்க வீட்டுல எங்கள பொய் சொல்லச் சொல்லி வளர்க்கல?
கதிர்: நானே call பண்ணிக்கிறேன்.
( சற்று நேரத்தில் பிரணவ் அங்கு வர)
கதிர்: பிரணவ் கண்ணா..சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல...என்‌ பேரே வெளில வர கூடாது..அப்புறம் அண்ணன பத்தி தெரியும்ல செல்லம்.
பிரணவ்: அண்ணா..நீங்க சொல்லி நான் இத கூட பண்ண மாட்டேனா?
கதிர்: செல்லம் டா..நீ..
பிரணவ் கிளம்ப..
ஜோன்ஸ்: சிறப்பான தரமான செய்கை மச்சி..இப்ப யார ஏமாத்த இந்த ஏற்பாடு..முல்லையா வா? Loose பயலே உன்னையே நீயே ஏமாத்திகிறடா...
செந்தில்: சை..கடுப்பா இருக்கு..நான் போய் தோசையை வாங்கிட்டு வரேன்..
சற்று தள்ளி சென்று செந்தில் பிரணவுக்கு போன் போட்டான்
பிரணவ்: செந்தில் அண்ணா..இப்ப போய் குடுத்துடறேன்..
செந்தில் : தம்பி பிரணவ்..குடுத்துடு..ஆனா முல்லைகிட்ட மட்டும் இது கதிர் கொடுக்க சொன்னதா சொல்லிடனும்..
பிரணவ்: அண்ணா...கதிர் அண்ணா..என்ன கொன்னுடுவாங்க..
செந்தில்: எல்லார்கிட்டேயும் அப்படியே சொல்லிடு..முல்லைகிட்ட மட்டும் கதிர் அண்ணா கொடுக்க சொன்னாங்க சொல்லிடு..இல்லைனா நான் என்ன பண்ணுவேனு தெரியும் ல கண்ணா?
பிரணவ்: அண்ணா?
செந்தில்: பிரச்சனை வந்து கதிர் ஏதாவது கேட்டா என் பேர சொல்லிடு..நான் பாத்துக்கிறேன்..
பிரணவ்: சரிணா..
(முல்லை வகுப்பறை)
எல்லாரும் முல்லைக்கு வாழ்த்து சொல்ல முல்லை முகம் மட்டும் சற்று வாடி இருந்தது..
தர்ஷ்: என்னடி நீ...cheer up...
முல்லை: மாமா வந்திருந்தா...நல்லா இருந்திருக்கும்..அவரை மட்டும் காணல..
ஊர்மி: தர்ஷ்..என்னவாம்?
தர்ஷ்: மாமா வரலையாம்.
முல்லை: நக்கலு..இருங்கடி உங்கள பார்த்துக்கிறேன்.
சௌமி: நம்ம இப்படி உருகுனா அவங்க அப்படி தாண்டி deal la விடுவாங்க...free ah விடு...உன் பின்னாடி எவ்வளவு பேர் சுத்துறாங்க..நீ என்னடி ஒரு உம்முனா மூஞ்சிய போய் தொங்கி கிட்டு இருக்க..
முல்லை: Sowmi..i dont want your advice pls in this issue. You dont know him..என்று சட்டுனு பேசிவிட்டாள்.
சௌமி: (முதல் முறையாக முல்லை அவளிடம் கோபப்பட்டு பேசுவதை பார்க்கிறாள்) Sorry di.
முல்லை: சாரி சௌமி..கடுப்புல பேசிட்டேன்.
(பிரணவ் எல்லாருக்கும் தன் Housewarming function என்று sweet distribute பண்ண ஆரம்பிச்சு முல்லை யிடம் வந்தான்)
முல்லை: Congrats Pranav. Thank you so much.
பிரணவ்: முல்லை..இது கதிர் அண்ணா நீ topper ஆ வந்ததுக்கு குடுக்க சொன்னாங்க என்று மெதுவாக வேகமாக சொல்லி இடத்தை காலி பண்ணிவிட்டான்.
(ஊர்மி, தர்ஷ்..சௌமி) என்ன சொல்வது என்றே தெரியாமல் அதிர்ச்சி யுடன் இருக்க..
முல்லை கண்ணீருடன் எழுந்து வகுப்பை விட்டு வெளிய வந்து நின்று கொண்டாள்.ஊர்மி..தர்ஷ்...சௌமி வெளியே வர ஊர்மியின் தோளில் சாய்ந்து கொண்டு அழ முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள்.
நீங்க class க்கு போங்க‌ என்று சிநேகிதிகளை அனுப்பி விட்டு கதிரை தேடி அவன் வகுப்பை நோக்கி நடந்தாள்.
(தொடரும்)

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now