கம்பி கோலங்கள்

625 55 6
                                    

முல்லை எழும் போது  கதிரின் அரவணைப்பின் வெதுமையை உணர்ந்தாள்.அதிகாலை குளிருக்கு கதிரை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

முல்லை அவன் அழகை கண் கொட்டாமல் பார்க்க கதிர் தூக்கத்தில் மெதுவாக தன் தாடியை தடவ முல்லை அவனுக்கு பதிலாக அவன் தாடியை தடவி விட்டாள்.

கதிரும் சிரித்துக்கொண்டே குளிருக்கு இதமாக அவளை இழுத்து போர்த்திக்கொண்டான்.

கதிர் (கண்ணை திறக்காமல்) என்னடி...எந்திருச்சிட்டியா?

முல்லை: இல்லை...தூங்கிட்டுதான் இருக்கேன்.

கதிர்: ஓகோ...தெரியுது...தூங்கு  டி...sight அடிக்காமா..கண்ண மூடு...

முல்லை: என் புருஷன்..நான் என்ன வேணா பண்ணுவேன்...நீங்க என்ன சொல்றது...அது சரி இப்படி கட்டிபிடிச்சா எப்படி தூங்குறது?

கதிர்: குளிருது? Fan அ off பண்ணுடி..

முல்லை: போர்வைய போர்த்த வேண்டியது தானா..எனக்கு fan வேணும்..off எல்லாம் பண்ண முடியாது..
முல்லை( மனதில்): நல்லா குளிரட்டும்..அப்பதான் இப்படியே இருப்பீங்க..

கதிர்: உனக்கு இல்லாத fan(s) ஆ...சரி என்னமோ பண்ணு... நீ இருந்தா எனக்கு தலையணையும் தேவை இல்லை...போர்வையும் தேவையில்லை...நீ மட்டுமே போதும் என்று இறுக்கம் சற்று அதிமானது..

முல்லை: ஓகோ...இந்த உலக மகா சிந்தனை தான் இப்போ இந்த அதிகாலைல உங்க மனசுல உதிச்சதா?

கதிர்:ஆமா டி...எனக்கு எப்பவும் உன் சிந்தனை தான்..அதுக்கு என்ன இப்போ?  பேச்சு குடுக்காத சும்மா....

முல்லை: அப்படியே பேச விட்டுட்டாலும்....மாமா இந்த தாடி என்ன குத்துது...

கதிர்: எடுத்துடுவா..

முல்லை: அய்யோ..வேண்டாம் மாமா...தாடிய மட்டும் எப்பவும் எடுத்துராதீக...அது என்து...

கதிர்‌ ( சிரித்துக்கொண்டே) சரி எடுக்க மாட்டேன்..அப்ப குத்து வாங்கு....

முல்லை: ஆளப் பாரு..ஒழுங்கா trim பண்ணுங்க...

கதிர்: காலங்காத்தால என்னடி வம்பு பண்ணிகிட்டு இருக்க. தாடிய விடுடி..வலிக்குது...நீ என்ன தூங்க விடமாட்ட போலையே..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now