கூண்டுக்கிளி

557 50 4
                                    

ஆனந்த‌ பூங்காற்றே
பகுதி- 18

PS வீடு..
கதிர்..கண்ணன்..ஜீவா மூவரும் முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்து மழையை ரசித்துக்கொண்டிருந்தனர்.

மூர்த்தி சோபாவில் அமர்ந்து தன் தம்பிகளை ரசித்துக்கொண்டிருந்தார்.

(இவங்க மூனு பேரும் இன்னும் சிறு வயதில் பார்த்த மாதிரியே இருக்காங்க...அவ்வளவா இவர்கள் சண்டை கூட போட்டதில்லை ஏன் என்று யோசித்துக் கொண்டிருந்தார்)

கதிர்: செம மழை ல ஜீவா அண்ணே.

ஜீவா: ஆமாடா செம மழை..

கண்: அண்ணங்களா மழைல நனையலாமா?

ஜீவா: சும்மா இருடா..அண்ணன் இருக்கு..திட்ட போகுது...

(தனமும்..மீனா வும் டீ போட்டு கொண்டுவர டீ...பட்டர் பிஸ்கட்..முறுக்கு சகிதமாக குடும்பமாக மழையை ரசித்தனர்..லெட்சுமி அம்மாள் சிரிஷை தூங்க வைத்துக்கொண்டிருந்தாள்.அவன் அப்பத்தாவிடம் கதை கேட்காமல் கண் அயர மாட்டான்)

ஜீவா மூர்த்தியை அழைக்க அவரும்  தரையில் பாயை விரித்து அமர்ந்து கொண்டு எல்லாரையும் பாய்க்கு அழைக்க எல்லாரும் ஆளுக்கு ஒரு போர்வை போர்த்திக் கொண்டு அமர்ந்தபடி டீயுடன் மழையை ரசித்தனர்.

மூ: தனம் சொல்ல மறந்துட்டேன் பாரு..இன்னைக்கு முருகன் மாமா கடைக்கு வந்தாரு.

த: அப்படியா..சித்தப்பா என்ன சொன்னாரு மாமா..

மூ: இங்கையே simple ஆ வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு தனம்.

ஜீ: மாமா ஏணே இப்படி இருக்காரு? மாமாவும்..அத்தையும் கஸ்தூரி அக்கா சொன்ன உடனே அப்படியே மாறிட்டாகளே அண்ணே..

மூர்: விடுடா..தெரிஞ்சது தானே?

கண்: அப்ப  function முடிஞ்சு நம்ம மட்டும் trip போலாமா அண்ணே?

தனம்: ஆமா மாமா..நம்ம போலாம்.

மீனா: அய்யா ஜாலி ஜீவா..எங்க plan drop ஆகிடுமோனு‌ பயந்துட்டேன்?

மூ: போலாம் பா மீனா.

ஜீவா: Super னே...வேனுக்கு நாளைக்கே சொல்லிடுறேன்.. அப்படியே function முடிச்சுட்டு கிளம்பிடலாம்..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now