உடைமை உணர்வு

620 56 1
                                    

தீனா தொடர்ந்து முல்லையிடம் பேசுவதை கவனித்த கதிர் கடுப்புடன் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்றான். முல்லை கதிர் பார்த்து விட்டு கோபமாக வெளியே செல்வதை புரிந்து கொண்டாள். முல்லைக்கு எப்படா இந்த தீனா விடுவான் என்று இருந்தது..
முல்லை: தீனா அண்ணா..எனக்கு library வரை போணும். நாளைக்கு நாம decide பண்ணலாமா‌ என்று கேட்க?
தீனா: ok முல்லை...உன் Phone nbr குடு என்று கேட்க....முல்லை விழித்தாள்..இல்லை practice sessions க்கு கூப்டனும் ல அதான்..உங்களுக்கு குடுக்க இஷ்டம் இல்லைனா பரவாயில்லை என்று சொல்ல..
தர்ஷ் No problem senior என்று தன் நம்பரையும் குடுத்து..முல்லையையும் குடுக்கச் சொல்ல வேறு வழியின்றி முல்லை தன் போன் நம்பரையும் குடுத்தாள்.பின்பு தர்ஷீம்..அவளும் வெளியில் வந்தார்கள்.
முல்லை: தர்ஷ்..உனக்கு அறிவிருக்கா? இப்படியா போன் நம்பர தருவது..நீ குடுத்ததும் இல்லாம என்னையும் spot ல போடுற...எனக்கு சுத்தமா பிடிக்கலை..
தர்ஷ்: Hey..தீனா ரொம்ப decent டி..சேது அவர பத்தி நிறைய சொல்லியிருக்கான்.ஒன்னா பிராக்டிஸ் பண்ணனும்னா நம்பர் இல்லாம எப்படி கூப்டுவாங்க என்று எதிர் கேள்வி கேட்டாள்.
முல்லைக்கு தர்ஷூடன் இப்ப வாக்குவாதம் பண்ணுவதில் interest இல்லை..அவள் கண்கள் கதிரை தேடின..அடுத்த திங்களில் இருந்து Sports எல்லாம் kickoff ஆவதால் Ground  cleaning and preparation work நடக்கும் இடத்தில் ஏதோ workers உடன் பேசிக்கொண்டிருந்தான்.அவனை தேடி முல்லை சென்றாள்.இன்னைக்கு நக்கல் நையாண்டி எல்லாம் வேணாம் முல்லை. To the point பேசிடணும் என்று சென்றாள்.
அவனை சுற்றி யாரும் இல்லை.
முல்லை: மாமா..
(முல்லையை பார்த்ததும் கதிருக்கு என்ன சொவ்லதென்றே தெரியவில்லை) மனசில் உள்ளதை சொல்லனும் போல இருந்தது அவனுக்கு...நீ தீனாவோட ஆடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிடலாமா என்று நினைத்தான்.அவள் மேல் Possessiveness அதிகமாக வருவதை உணர்ந்தான்..இது தப்பாச்சே என்று சிந்தனை ஓடியது..அவள் திறமைக்கு நாம் குறுக்கே நிற்பது போல் ஆகாதா என்ற குழப்பத்துடன் சொல்லுங்க முல்லை..
'ங்க' மரியாதை விகுதி அவளை அதிகமாக காயப்படுத்தியது..இந்த முறை அவன் சிரித்துக்கொண்டு நக்கலா கூட சொல்லவில்லை..ரொம்ப யோசிச்சு பேசுற மாதிரி இருந்தது.)
முல்லை: உங்க கிட்ட பேசணும் மாமா..
கதிர்: சொல்லு முல்லை..
முல்லை: நேத்து நீங்க கூப்பிடும் போது அப்பா call பண்ணதால தான் நான் காரைக்குடில இறங்க‌முடியலை..sorry. இல்லேனா இறங்கி இருப்பேன்.
கதிர்: பரவாயில்லை.நான் அதை மறந்துட்டேன் முல்லை. ஒன்னும் பிரச்சனை இல்லை.
முல்லைக்கு என்ன‌ சொல்வதென்றே தெரியவில்லை. செம கோபத்துல இருக்காங்க போல என்று நினைத்துக்கொண்டாள்.திட்டினா கூட பரவாயில்லை.இப்படி பேசினா என்ன பண்றதுனே அவளுக்கு தெரியலை..
முல்லை: மாமா உங்கள ஒன்னு கேட்கவா..தீனா அண்ணனோட நான் dance ஆடலாமா? உங்களுக்கு பிடிக்கலைனா நான் ஆடல மாமா..
கதிர்: அப்படி எல்லாம் இல்லை முல்லை..உனக்கு பிடிச்சிருந்தா ஆடு .இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு..கொஞ்சம் கவனமா இருக்கனும்‌ அவன்கிட்ட அவ்வளவுதான்.
முல்லை: சரி மாமா..ஏன்‌ மாமா ஏதோ சோகமா பேசுறீக...இப்படி பேசாதீக..நல்லாவே இல்லை..எனக்கு கஷ்டமா இருக்கு.
கதிர்: எனக்கு எந்த சோகமும் இல்லை முல்லை.. கொஞ்சம் வேலை அதான்..நம்ம அப்புறம் பேசலாமா?
முல்லை: கஷ்டத்துடன் சரி மாமா என்று கிளம்பியவள் திரும்பி
மாமா என்று நிற்க
கதிர்: என்ன‌ முல்லை..
முல்லை: நான் வேணா இன்னைக்கு பஸ்ல போகாம உங்க கூட வரவா..நம்ம காரைக்குடி க்கு போய் பேசலாமா?
கதிர்: வேண்டாம் முல்லை..இன்னைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. Culturals work தான்.நம்ம இன்னொரு நாள் பேசலாம் முல்லை என்று சொன்னான்.
முல்லைக்கு கண்ணீர்  துளிகள் கண்களின் ஓரத்தில் எப்ப வேணா விழுவேன் என்று இருந்தது..
(Its complete ackward responses from his end.).
-------------------------------------------------------------------
கதிர்..வைஷ்ணவி...செந்தில்..ஜோன்ஸ். culturals commitee members எல்லாரும் ஆளு ஆளுக்கு 2 days ஆ கால்ல பம்பரத்த கட்டிகிட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். College atmosphere பார்பதற்கு ரொம்பவே அழகாக இருந்தது..எல்லாரும் ஒரே குடும்பமா culturals ஐ எதிர்பார்த்து college decorations...arrangements என்று வேலையை பிரித்து ரொம்ப creative ஆக செய்தனர். Seniors.. Juniors என்று வேறுபாடு  இல்லாமல் எல்லாரும் friends மாதிரி வேலை பார்த்துட்டு ஒன்னா cafeteria ல share பண்ணி சாப்பிட்டுக்கு கொண்டிருந்தனர்.. Culturals ஆ விட அதுக்கு உண்டான Process  ரொம்பவே enjoyable experience ஆக இருந்தது மாணவர்களுக்கு... College க்கு வரவே எல்லாரும் Jolly ஆக இருந்தது..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now