தெளிவு

599 52 3
                                    

கதிர் வேலையை விட வேண்டாம் நாங்க கடையை  பார்த்துக்குறோம் என்று தனமும்..மூர்த்தியும்..கேட்டபோது..கதிர் தனக்கு குடும்பம் தானே முக்கியம்..நான் முடிவு செய்துவிட்டேன் என்று அரை மனதுடன் கூறி அந்த பேச்சை முடித்துவிட்டான்.

லெட்சுமி அதுவும் நல்லதுதான் என்று கூறிவிட்டாள்.

அதன் பிறகு முல்லையிடம் அவன் பேசவில்லை..வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.. அவனுக்கு யோசிக்க சிறிது தனிமை தேவைப்பட்டது.இந்த முடிவு தப்பாக போக நிறைய வாய்ப்பிருக்கு...அவசரப்பட்டுடோமோ என்று வருந்தினான்..

முல்லையும்.. முருகனும் கதிரை நினைத்து மிகவும் கவலைப்பட்டனர்...ஒரு மணி நேரம் கழித்து அவன் அதே குழப்ப மனநிலையோடு தான் வந்தான்..பின்பு உணவருந்தும் போது கூட சிந்தித்து கொண்டே அவன் யார் கூடவும் பெரிதாக பேசவில்லை..

Dinner முடித்து கதிர் KM room ல் தனியாக உட்கார்ந்திருக்க முல்லை உள்ளே வந்தாள்.

முல்லைக்கு கதிருடன் தனியாக பேச இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.

முல்லை: மாமா...

கதிர்: என்ன?

முல்லை: பேசலாமா pls?

கதிர்: வேண்டாம் முல்லை..

முல்லை: எனக்கு பேசணும்.

கதிர் அமைதியாக இருந்தான்

முல்லை: அதான் முடிவு எடுத்துட்டீங்கள..அப்புறம் என்னவாம்?

கதிர்: உனக்கு நான் வேலையை விடுறதுல கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா?

முல்லை: உண்மைய சொல்லனும்னா எனக்கு சந்தோஷமா இருக்கு....நீங்க என் கூடவே இருப்பீங்களே...அத விட எனக்கு வேற என்ன சந்தோஷம் வேணும் மாமா...

கதிர்: உனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம் என்ன?

(முல்லை ஒரு நிமிடம் என்ன சொல்றதுனு தெரியாமல் நின்றுவிட்டாள்)

முல்லை: மாமா...

கதிர்: என்ன மாமா?..நான் சொல்றது சரி தான..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now