வேலும்..மயிலும்.

634 62 5
                                    


பிரணவிற்கு முல்லை சட்டென்று எழுந்து போவதையும்..அவள் friends பின்னால் போவதையும் பார்த்து கொஞ்சம் பயம் வந்துவிட்டது. முல்லை சோகமாக தனியாக போவதை பார்த்து அவளை பின்தொடர்ந்தான்.
பிரணவ்: முல்லை.
முல்லை: திரும்பி பார்த்து ஆச்சரியமாக என்ன பிரணவ் ?
பிரணவ்: ஏதும்‌ problem இல்லையே? கதிர் அண்ணா அவங்க பேரே தெரியக் கூடாது னு தான் குடுத்து விட்டாங்க. செந்தில் அண்ணா தான் கதிர் அண்ணாவுக்கு தெரியாமல் உங்கிட்ட மட்டும் சொல்ல சொல்லி மிரட்டிட்டாங்க முல்லை. Pls..கதிர் அண்ணா கிட்ட போட்டு கொடுத்துறாதே?
முல்லை: No problem Pranav.‌நான்‌அதப்பத்தி ஏதும் கேட்க மாட்டேன்.
பிரணவ்: காலேஜ் ல Seniors Juniors கலாட்டா பண்றதெல்லாம்  சகஜம் தான? இதெல்லாம் பெருசா எடுத்துக்காதே pls.கதிர் அண்ணா ரொம்ப நல்லவரு.எல்லாருக்கும் help பண்ணுவாரு..அவரை போட்டுக்குடுத்துறாத..உங்க parents கிட்ட எல்லாம் சொல்லாதே.. அப்படியே விட்ரேன் pls.
முல்லை: அவளால் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை..எல்லாம் என் நேரம்..என் மாமாவ பத்தி என்கிட்ட யாரெல்லாம் certificate குடுக்குறாங்க? என்று மனதுக்குள் நினைத்துக்  கொண்டாள்.
முல்லை: பிரணவ் நான் இத பத்தி யார்கிட்டேயும் complain பண்ண மாட்டேன். Dont worry and thank you for your concern.
பிரணவ்: அப்பாடா என்று இருந்தது அவனுக்கு. Thanks Mullai என்று விடைபெற்றான்.
நாலாவது மாடிக்கு போகும் போது முல்லைக்கு கொஞ்சம் நடுக்கமாகதான் இருந்தது. Fresher அ இருக்கும் வரை இங்கெல்லாம் அவள் தனியாக வந்தது இல்லை. Ragging இல்லாட்டாலும் seniors கெத்து காட்டுவாங்க. அவங்க கண்ணுல படாம போறது Freshers இயல்பு..இன்னைக்கு அவளே செல்கிறாள்..துணிந்து விட்டாள்.
Final yr block...Computer science department
வகுப்பறையில் அவ்வளவு மாணவர்கள் இல்லை. Final year limited classes..IPT..Project work...lab..என்று final year students  இருந்ததால் அவ்வளவு கூட்டம் இல்லை. ஒரு 15  மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள்.
தயக்கத்துடன் வகுப்பறையில் உள் சென்றாள். கதிரை காணவில்லை.
ஒரு senior gang அவளை பார்த்ததும்  உள்ளே அழைத்தது.. கொஞ்சம் யோசனை வந்துவிட்டது..Senthil அண்ணாக்கு phone பண்ணிட்டு வந்துருக்கலாமோ என்று நினைத்தாள்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்துக்கலாம் முல்லை என்று அவர்களிடம் சென்றாள்.
Senior 1: உன் பேர் என்ன?
முல்லை: முல்லை.
Senior 2 :  Senior க்கு மரியாதை எல்லாம் இல்லையா?  இப்படி தான் மொட்டையா பதில் சொல்வியா என்று அதட்டலாய் ஒரு கேள்வி
முல்லை: Sorry senior. என் பேர் முல்லை senior.
Senior 3: எந்த ஊர்‌ நீ?
முல்லை: பிள்ளையார்பட்டி Senior.
Senior 1: நீ தான் அந்த பிள்ளையார்பட்டி beauty யா..என்ன விஷயம். என்ன இந்த பக்கம்?
முல்லை: செந்தில் அண்ணாவ பார்க்க வந்தேன்.
( கதிர் மாமாவ பார்க்க வந்தேன் என்று சொல்லி மாமா கோபித்துக் கொண்டால்)
Senior 2: அண்ணாவா? Senior யாரையும் அண்ணானு கூப்பிட கூடாதுனு உனக்கு தெரியாதா? செந்தில் என்ன உன் சொந்த அண்ணனா? இல்ல பெரியம்மா பையனா? சித்தி பையனா?
முல்லைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
முல்லை: Sorry Senior.அவுங்க எங்க School என்று தடுமாற‌ கதிர் lab முடித்து  உள்ள வர சரியாக இருந்தது.
முல்லையை எதிர்பார்க்க வில்லை அவன் நேராக அங்கு வந்தான். முல்லையை பார்த்தான்.
அவள் ஒரு கும்பல் முன்னாள் தனியாக நிற்பதை பார்த்ததும் அவனுக்கு செம்ம கோபம் வந்துவிட்டது.
என்னடா Ragging ah?
இல்ல கதிரு. சும்மா பேசிகிட்டு இருந்தோம்..
அப்படியே நிறுத்திக்கோங்க.
இவ என் மாமா பொண்ணுடா.. வம்பு வச்சுக்காதீங்க.. Friends னு கூட பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்.
என்ன கதிரு.. உன்‌ மாமா பொண்ணா? சொல்லவே இல்லை..நீங்க போங்க Mullai Sister.
( கதிர் ரொம்ப அமைதியா இருப்பான்..Friendly ஆன பையன். யாருக்கு பிரச்சனை வந்தாலும் கூட நிப்பான். ஆனா கோபம் வந்தா அடிக்க யோசிக்க மாட்டான் என்று அவன் வகுப்பு நண்பர்களுக்கு அவன் character sketch ஒரளவு  நல்லா புரியும். இவன் கிட்ட போய் வரண்டு இழுத்துகிட்டு என்று அந்த கூட்டம் கலைந்தது.)
முல்லைக்கு கதிர் சொன்னதை கேட்டவுடன் அவ்வளவு சந்தோஷம். பேசாம நின்றாள். மாமா என்று நான் சொல்ல கூடாதாம். இவரு Assault ஆ என் மாமா பொண்ணு னு சொல்வாராம்.
கதிர் : உட்காரு. என்ன பிரச்சினை?
முல்லை கதிரின் முன் desk ல் அமர்ந்தாள்
முல்லை: பிரச்சனை எல்லாம் இல்லை SENIOR என்று பதில் அழுத்தமாக வந்தது.
கதிருக்கு சிரிப்பு வந்துவிட்டது..அடக்கிக் கொண்டான். College la என்ன மாமா என்று கூப்பிடாதே என்று சொன்னதற்கு வந்த பதில்‌ இது என்று புரிந்தது..
கதிர்: (மனதிற்குள் சிரித்துக் கொண்டே) வேறு‌‌ என்ன விஷயம்.
முல்லை: நான் செந்தில் அண்ணாவ பார்க்க வந்தேன் என்றாள்.
கதிர்: ஓகோ..செந்தில பார்க்க வந்தியா..சரி..செந்திலுக்கு call ஆ போட்டு மச்சி உன்ன  Second year Junior பொண்ணு பார்க்க வந்துருக்காடா? சீக்கிரம் வா.
முல்லை ( மனதில்) : 'Junior பொண்ணு'...இருக்கட்டும்...பார்த்துக்கிறேன்.
செந்தில்: மச்சி யாருடா? பொண்ணு அழகா இருக்காளா? பிடிச்சு வைடா..5 mts..
கதிர்: அழகாதான் இருக்கா..ஆனால் உன் தங்கச்சி னு சொல்றாடா மாப்ள..நீ வா..என்றான் சிரித்துக்கொண்டே..
முல்லை ( மனதில்) : hmm..அழகா தான் இருக்காளா? இந்த நக்கல கேட்டு எவ்வளவு நாளாச்சு.. miss u mama என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அவள் நினைக்கும் போதே vaishnavi உள்ளே வந்தாள். வைஷ்ணவி
அந்த college இன் sensational beauty என்றால் மிகையல்ல.அவளை ஒரு முறை மட்டும் பார்த்து விட்டு யாராலும் அவ்வளவு எளிதாக நகர முடியாது
வைஷ்: Mr. Kathir கொஞ்சம் தள்ளி உட்காருங்க..அவன் அருகில் இயல்பாக உட்கார்ந்து கொண்டாள்..அடடே..  இந்த பொண்ணு யாரு...முல்லை தான நீ? அழகா இருக்கடா செல்லம்...கேள்வி பட்டேன் உன்ன பத்தி..இப்ப தான் பார்க்கிறேன்..இங்க என்ன வேளை உனக்கு...Class க்கு போல..
கதிர்: இவங்க அவங்க செந்தில் அண்ணன பார்க்க வந்திருக்காக?
வைஷ்: அதான‌ பார்த்தேன்..நீ தான் கடலை போட்டுகிட்டு இருக்கியோனு காண்டாகிட்டேன்.
முல்லை: (மனதில்) என் மாமா என் கூட கடலை போட்டா உனக்கென்னடி ? இவள் என்ன மாமா கிட்ட ரொம்ப உரிமை எடுத்து பேசுறா..
வைஷ்: நீ சொல்லுடா..Afternoon free ah?
கதிர்: Busy னு சொன்னா மட்டும்..சொல்ல வந்தத சொல்லாமலா போக போற..என்ன விஷயம்?
வைஷ்: ஏண்டா சிடு மூஞ்சி.கொஞ்சம் சிரிச்சு தான் பேசேன்..நீயெல்லாம் ஒரு friend..எத்தனை message பண்றது...எதுக்காச்சும் reply இருக்கா..உனக்கெல்லாம் phone எதுக்கோ?
கதிர்: நான் கடையில இருக்கும் போது நீ message பண்ணா நான் என்ன பண்றது...அதான் கடைசியா reply பண்ணேனே...
வைஷ்: ஆமா..பக்க பக்கமா எழுதி தள்ளிட்ட... Sorry..நாளைக்கு நேர்ல பேசுறேன்‌ சொல்றது எல்லாம் reply யாடா..
கதிர்: மானத்தை வாங்காத..என்ன வேணும் உனக்கு?
வைஷ்: படத்துக்கு போலாமா?
முல்லை: கண்ணுல தண்ணி வந்திடுச்சு. (மனதில்) மாமா..நீ பொண்ணுங்க கூட எல்லாம் படத்துக்கு போக ஆரம்பிச்சிட்டியா?
கதிர்: வைஷ்ணவி..என்ன ஆள விடு..எத்தனை....முழுசா முடிப்பதற்குள் செந்திலும் ஜோன்ஸும் உள்ள வந்துவிட்டார்கள்.
(முல்லை: செந்தில் அண்ணா நீங்க கொஞ்சம் late ஆ வந்திருக்கலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்)
முல்லையை பார்த்ததும் அவனுக்கு புரிந்து விட்டது..
முல்லை: செந்தில் அண்ணா..உங்க கிட்ட தனியா பேசணும்.
வைஷ்: தனியா பேசணுமா? இதெல்லாம் சரியில்லையே..
கதிர்: வைஷூ..சும்மா இரு...செந்தில் போடா...டேய்...பேச வேண்டியது மட்டும் பேசணும் சரியா...தேவை இல்லாதெல்லாம் எல்லாம் பேச கூடாது கண்ணு..
செந்தில்: எங்களுக்கு தெரியும்..நீ உன் வேலைய பாரு..உன் மிரட்டல் உருட்டல் எல்லாம் 15 வருஷமா பாத்தாச்சு.
கதிர் சிரித்துக் கொண்டான். செந்தில் கடந்த ஒரு வருடமா அடக்கி தான் வாசிக்கிறான் என்ற நம்பிக்கை கதிருக்கு..வேற ஏதாவது பிரச்சனையா இருந்தால் என்ன பண்றது..அதான் செந்தில தனியா பேச ஒத்துகிட்டான்.
அவர்கள் சற்று தூரத்தில் சென்று நின்றார்கள்.
செந்தில்: என்ன விஷயம் முல்லை?
முல்லை: கண்களில் இருந்து கண்ணீர் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் வடிந்தது..துடைத்துக்கொண்டே..அண்ணா..உண்மைய சொல்லுங்க..யாரு sweets வாங்கி கொடுக்க சொன்னது..
செந்தில்: என்னமா உனக்கு சந்தேகம் உன் கதிர் மாமா தான்.
முல்லை: இவ்வளவு பாசம் இருந்தும் அப்புறம் ஏன் அண்ணா மாமா எங்கிட்ட யாருகிட்டையோ பேசுற மாதிரி பேசுறாங்க...
செந்தில்: முல்லை..நான் உன்கிட்ட இதெல்லாம் பேசலாமானு தெரியலை.
எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை..அவன் என்ன கொண்டே போட்டுருவான்.எங்கிட்ட பேசாம கூட போய்டுவான்..இருந்தாலும் பரவாயில்லை..
முதல்ல நீ எனக்கு பதில் சொல்லு..எனக்கு தெரிஞ்சதுதான் இருந்தாலும் கேட்கிறேன்.
முல்லை...நீ கதிரை Love பண்றீயா? இல்ல அவன் மேல உள்ளது மாமா ங்கிற பழைய பாசம் மட்டும் தானா..
முல்லை: தயக்கத்துடன்..எனக்கு வாழ்க்கையில கல்யாணம் ஒன்னு நடந்தா அது கதிர் மாமா கூட தான் செந்தில் அண்ணா.
செந்தில்: இவ்வளவு தெளிவான பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.
செந்தில்: நல்லது முல்லை.இப்ப உனக்கு இவ்வளவு தான் பதில்.
கதிரோட weakness இரண்டு...ஒன்னு அவன் அம்மா...இன்னொன்னு நீ.இந்த இரண்டுல ஒன்னு தான் தேர்ந்தெடுக்கும் ஒரு நிலைமை வந்திடும் னு முன்னெச்சரிக்கை யா அவன் 4 வருஷமாக  தனக்கு தானே வேலி போட்டுகிட்டான்.அவன்‌ தன்ன சுத்தி கட்டிகிட்ட கட்டடம், வீராப்பெல்லாம் உன்னைய பார்த்த அந்த நிமிடமே உடைந்து காலியாகிடுச்சு..இப்ப சும்மா vulnerable ஆ சுத்திகிட்டு இருக்கான்.அதான் உன்கிட்ட casual இருக்க மாதிரி நடிக்கிறான். உன் கிட்ட பேச்சையும் வளர்க்க கூடாது... Avoid ம் பண்ண கூடாது னு ஒரு strategy சாரு மனசுல..நீயே கோபப்பட்டு மனம் மாறி avoid பண்ணிருவேனு எதிர்பார்த்தான்.. ஒரளவு 1 வருடம் ஓட்டிட்டான்..ஆனால் அவனுக்குள்ளே  conflict  ஆன‌ சிந்தனை யோட தான் இருக்கான் முல்லை.நாங்க பார்த்துகிட்டு தானே இருக்கோம்..இன்னும் 6 மாஷம் ஓட்டிட்டு சென்னைக்கு project பண்ண போய்டலாம்..நீ மனசு மாறிடுவனு strategy அய்யாவுக்கு. ஆனா ஒன்னு மட்டும் உறுதி..அவன் வாழ்க்கையில கல்யாணம் என்று ஒன்னு நடந்தா அது முல்லை கூட மட்டும் தான்.எழுதி வச்சுக்க...அவங்க அம்மாவல நினைச்சா அவனை முல்லை கிட்டு இருந்து பிரிக்க முடியும்...ஆனா வேறு யார் கூடயும் சேர்க்க முடியாது..
முல்லைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவள் புரிந்து கொண்டாள்.பிரச்சனையின் அடிவேறை புரிந்து கொண்டாள்.
செந்திலுக்கும் மன நிம்மதி..கடந்த ஒரு வருடங்களாக முல்லையிடம் பேச வேண்டும் என்று இருந்தான்.கொட்டிவிட்டான்.அவனுக்கு அவன் friend சந்தோஷமா இருக்கனும். Friend ஓட கோபம் எல்லாம் அவன் தாங்கிப்பான்.முல்லைக்கு ஆறுதல் சொல்லி விடை பெற்றான்.
முல்லை வெகு நேரம் அங்கு தனியாக நின்றாள். ஒரு வருடமாக படிப்படியாக நடக்க வேண்டியதெல்லாம்..ஒரே நாளில் நடந்தால் என்ன செய்வாள்..பாவம்...She needed her time to clear her thoughts and strategize. அவளுக்கு இருக்கும் நேரம் 6 மாதம். அவன் இங்கு இருக்கும் போதோ இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும். முடிவு கட்டிவிட்டாள்.
முல்லை: எங்கிட்டயே நடிக்கிறியா மாமா...உன் முருகன் மாமா பொண்ணு முல்லையா தான என்ன பார்த்துருக்க..பிள்ளையார்பட்டி பார்வதி பொண்ணு முல்லையை இனிமே தான்‌ நீ பார்க்கப்போற..சிரிப்பு வந்தது..
(முல்லையின் ஆட்டம் ஆரம்பம்)

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now