தன்மானம்

631 48 6
                                    

எல்லாரும் அமைதியாக கலைந்து செல்ல மழை பிடித்துக்கொண்டது...
அன்றைய பொழுது எல்லோரையும் ஒரு விதமான தனிமைக்கு தள்ளியது...ஒரே வீட்டில் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொருவர் தனியாக இருந்தனர்.வழக்கமாக மழை பெய்தால் அந்த குடும்பம் கூட்டாய் கொண்டாடும்..இன்று யாருக்கும் ஆர்வமில்லை..ஒரு விதமான கணம் அவர்களை அமுக்கியது போல உணர்வு..யாருக்குமே யாருடனும் பேச பிடிக்கவில்லை..

கதிர் தன் நண்பர்களிடம் உதவி கேட்டு பலரை அழைத்துக்கொண்டிருந்தான்.

முல்லை தன் நகைகளை எடுத்து பட்டியலிட்டு வைத்திருந்தாள்.முருகனும் உடன் இருந்தார்.

நகைகளை எடுத்துக்கொண்டு முல்லை
மூர்த்தியின் அறைக்கு செல்ல முருகனும் கூட சென்றார்.அவள்  நகைகளை எடுத்து போவதை பார்த்து கதிரும் பின்தொடர்ந்தான்.

மூர்த்தி தனத்துடன் அமர்ந்திருக்க முல்லை பார்த்ததும் வாமா என்று சொல்ல

முல்லை: மூர்த்தி மாமா..உங்களுக்கு ஏதும் எங்கள் மீது கோபமா?

மூர்த்தி: எனக்கு என்ன கோபம் முல்லை..கதிரும்..நீயும் சொன்னது நியாயம் தான். நீங்க சொன்ன முடிவுதான் சரி முல்லை..

முல்லை: அக்கா நீங்க என்ன நினைக்கீறீங்க

தனம்: என்னடி இப்படி கேட்கிற? எனக்கும் கதிர் சொன்னது தான் சரினு இருந்தது.நீங்க எடுக்கிற முடிவு தாண்டி இதுல..

முல்லை: உங்களை மீறி எங்க முடிவு ஒன்னும் பெருசு இல்லை மாமா அக்கா.உங்கள விட இந்த வீட்டு சொந்தங்களை விட எனக்கு அந்த வீடு முக்கியம் இல்லை மாமா..நீங்க சொல்றத செய்றோம் மாமா என்று தீர்க்கமாக சொல்ல

மூர்த்தி: (சட்டென்று கலங்கி விட்டார்)..முல்லை..இந்த பெருந்தன்மை இருக்கே இதைவிட ஒரு கூட்டு குடும்பத்துக்கு வேற என்ன வேணும்‌..உண்மையிலேயே நீங்க எடுத்த முடிவு தான் சரி..எனக்கு இருந்த கொஞ்ச சந்தேகமும் கதிர் பேசுனதுக்கு அப்புறம் இல்லை..

முல்லை: சரி‌ மாமா..இப்ப தான் திருப்தியா இருக்கு.. மாமா..இந்தாங்க..என் நகைகள்...20 பவுன் இருக்கு என்று கொடுத்தாள்.

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now