உறவுகள் தொடர்கதை

664 55 2
                                    

ஆனந்த பூங்காற்றே

பகுதி - 6

குமரேசன்‌ மாமா: டேய் ஜீவா.நல்லா அடையாளம் சொன்னடா கதிருக்கு முல்லைய?..அவன் கடை வாசலிலே அவள வாசம் பிடிச்சுருப்பாண்டா...ஹஹஹஹா..
(எல்லாரும் அவரை கோபமாக பார்க்க சற்று பல்லைக் கடித்துக்கொண்டு) அவுக இரண்டு பேரும் ஒரு college la தான படிக்கிறாங்க...இது தெரியாதடா உனக்கு.

முல்லைக்கு கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது ( மனதிற்குள் ...குமரேசன் அப்பா...நீர் வாழ்க..உன் குலம் வாழ்க...உன் கொற்றம் வாழ்க...vera level..ஆரம்பமே அமர்க்களமா இருக்கு)

ஜீவா: என்ன மாமா சொல்றீக...எனக்கு தெரியாதே மாமா? உங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது? கடைல என் கூடவே தான இருக்கீங்க?

கும: உன் தம்பி கதிரு தாண்டே சொன்னான்.

ஜீவா: ஏண்டா கதிரு..இப்பெல்லாம் நீ என்கிட்ட எதுவுமே சொல்றது இல்ல? என்னடா...நானும் பாத்துகிட்டு தாண்டா இருக்கேன்..

கதிர்: ஏன் மாமா? என்று குமரேசன்‌ மாமா வை முறைத்துக்கொண்டே ஜீவா அண்ணே...அன்னைக்கி ஏதோ செந்தில் கிட்ட phone ல பேசுனத கேட்டுகிட்டு மாமா scene create பண்ணுதுனே..மாமா நீங்க கொஞ்சம் அடங்குங்க...ஏதாவது உளறி வைக்காதீங்க...

முல்லை (மனதில்) :எதுக்கு மாமா குமரேசன்‌ அப்பாவ off பண்ணுது..சரியில்லையே.. மாமா நீ என்ன பத்தி பேசிகிட்டே தான் இருக்க..நேர்ல பார்த்தா மட்டும் கண்டுக்காத மாதிரி படம் ஓட்டுற.. இருக்கட்டும்..வச்சுக்கிறேன

(இந்த குடும்பத்தை ரொம்ப Miss பண்றோமேனு மனசுக்குள் வருத்தம். இருக்கட்டும்.. இவுகள கல்யாணம் பண்ணிகிட்டு இந்த கடைய தான நாள் பூரா பார்த்திகிட்டு உட்காரப்போறோம் என்று நினைக்க நினைப்பே அப்படி இருந்தது அவளுக்கு)

மூர்த்தி: சிரித்தபடி, சரவணா..முல்லைக்கு சர்பத் வாங்கிட்டு வா. என்ன முல்லை?

முல்லை: (கண் கலங்கி) மாமா நீங்க எதுவும் மறக்கலையா?

ஜீவா: சரவணா..நாகுவிலாஸ் சர்பத் டா..மஞ்சக்கலர்..என்ன முல்லை..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now