மனக்குழப்பம்

538 51 4
                                    

ஜீவா ஆனந்துக்கு பேசி அதை
Get together ஆக மாற்ற...ஆனந்த் அவன் அம்மாவிடம் பேச, அவன் அம்மாவும் நவகிரக கோவில்களுக்கு போய் வந்து கல்யாணம் பேசலாம் என்று ஜோசியர் முன்பு சொன்னதை நினைவுப்படுத்தி சம்மதம் தெரிவித்தாள்.

கஸ்தூரியிடம் இந்த கல்யாண‌ பேச்சை கும்பகோணம் போய் வந்து எடுக்கலாம் என்று கஸ்தூரியின் அம்மா சொல்ல கஸ்தூரியும் அதற்கு சம்மதித்தாள்.

கஸ்தூரி பார்வதியிடம் ஆனந்திற்கும்..முல்லைக்கும் உள்ள நவகிரக தோஷங்களுக்கு பரிகாரமாக நவகிரக கோவில்களில் அர்ச்சனை செய்துவிட்டு வந்து இந்த கல்யாண பேச்சை தொடங்கலாம் என்று சொல்ல பார்வதிக்கு இந்த முறை வழியில்லாமல் போனது...முல்லைக்கு தோஷம் நிவர்த்தி என்று சொல்லப்பட்டதால் உடனே சம்மதித்தாள்..முருகனும் வழக்கம் போல சம்மதித்தார். Its all fell in place.

முல்லை கதிருக்கு அழைத்தாள்.
கதிர்: சொல்லுடி
முல்லை: என்ன சொல்ல..
கதிர்: ஏதாச்சும்
முல்லை: உங்களுக்கு ஒரு sad news.
கதிர் என்ன என்று பதற
முல்லை (சிரித்துக்கொண்டே) : மாமா..பதறாதீக...நாங்க கும்பகோணம் trip வரோம்.அது உங்களுக்கு sad news தானா

கதிர்: ஓ அப்படியா?

முல்லை: என்ன‌ அப்படியா? ஒரு  Enthu கூட இல்லை..என் நாங்க வரது பிடிக்கலையா உங்களுக்கு

கதிர்: நான் அப்படி சொன்னேனா?

முல்லை: உங்களுக்கு என்ன‌ பிரச்சனை..நேத்துல இருந்து நீங்க என்கிட்ட சரியாவே பேசலை.. Practice பண்ணும் போது கூட உங்க சேட்டைகள் எல்லாமே இன்னைக்கு missing..ஏன் மாமா? நான் வேணா வைஷ்ணவி அக்கா கிட்ட sorry சொல்லிடுறேன் மாமா...

கதிர்: முல்லை pls..அவ பேச்ச விடு..

முல்லை: அப்பறம் ஏன்? நான் சொன்ன உடனே நீங்க குஷியா துள்ளுவீங்க னு எதிர்பார்த்தேன். போங்க..ஆனந்த் மாமா தான் இந்த trip க்கு கஸ்தூரி அத்தாச்சி, அத்தை...அம்மா கிட்ட எல்லாம் பேசி  சம்மதம் வாங்கிருக்காங்க..நீங்களும் இருக்கீங்களே...கிணத்துல போட்ட கல்லு மாதிரி...ஏன் நீங்க இந்த விஷயத்துல அவ்வளவு interest காட்டலேனு தெரியலை எனக்கு..waste மாமா நீங்க..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now