பூங்காற்று புயலானது?

622 56 34
                                    

முல்லை calling வைஷ்ணவி

வைஷ்: Hello...who is this?

முல்லை: நீங்க வைஷ்ணவி தானா...நான் முல்லை பேசுறேங்க..

வை: முல்லை..என்ன அதிசயமா..எப்படி இருக்க? கதிர் எப்படி இருக்கான்.

முல்: அவங்க நல்லா இருக்காங்க..நான் உங்கள நேர்ல் பார்த்து தனியா கொஞ்சம் பேசணும்..இன்னைக்கு பேச முடியுமா...நீங்க காரைக்குடி ல தான இருக்கீங்க

வைஷூ: என்கிட்ட பேசணுமா? உனக்கு என்கிட்ட பேச பிடிக்காதே? என்ன திடீர்னு?

முல்லை: நேர்ல பேசலாம் கா...

இருவரும் காரைக்குடியில் கல்லூரி முடிந்து சந்தித்தனர்.

வை: சொல்லு முல்லை..என்ன விஷயம்.

முல்: நான் open ஆ பேசிடலாம்னு தான் இங்க வந்திருக்கேன்...எனக்கு நீங்களும் அவுகளும் பழகுறது பிடிக்கலை...இன்னைக்கு நீங்க அனுப்புன‌ whatsapp
voice messages கேட்டேன்.I feel irritated and uncomfortable கா.

வைஷூ: அப்படி என்ன அதுல தப்பா இருந்துச்சுனு நான் தெரிஞ்சுக்கலாமா?

முல்லை: Love u..miss u னு அனுப்புறீகளே...அதுக்கு என்ன அர்த்தம்...

வைஷூ: என் friend அ நேசிக்கிறேனு அர்த்தம்.தப்பா?

முல்லை: இது எனக்கு அவுக wife ஆ irritating ஆ இருக்கு..அவுக எனக்கு மட்டும் தான்...வேற யாரும் அவகளுக்கு இந்த மாதிரி அனுப்புறது..ரொம்ப உரிமை எடுத்து பேசுறது.. எனக்கு சுத்தமா பிடிக்கலை...புரிஞ்சுக்குங்க..

வைஷூ: அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..நாங்க இரண்டு பேரும்  காலேஜ் ல சேர்ந்தது ல இருந்து இப்படிதான் பேசிக்கிறோம்..நீ இடையில வந்தவ?

முல்லை: நான் உங்களுக்கு முன்னாடியே வந்தவங்க..நான் விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே அவுக கூட இருக்கவ..நீங்க தான் இப்ப இடையில வந்தவுக...

வைஷூ: நான் தொடர்ச்சியா அவன் கூட எப்போதும் இருந்தவ...உன்னை மாதிரி பாதியிலே கழட்டி விட்டவ இல்லை...

இது முல்லைக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது....நிதானத்தை இழக்க வைத்தது

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now