நீ வருவாய் என..

731 56 3
                                    

கடந்த 1.5 வருடம்

முல்லை கதிரின் வாழ்க்கையில் கடந்த 1.5 வருடங்கள் மிகவும் வருத்தமான கடினமான நாட்கள்.

கதிருடன் முல்லையின் கடைசி சந்திப்பிற்கு பிறகு  கதிர் லெட்சுமி அம்மாளிடம் வெகு நேரம் கதறி அழுதான்..அவன் அப்பா இறந்த பிறகு அவன் இப்படி அழுது லெட்சுமி அம்மா அன்று தான் பாரக்கிறாள்.

லெட்சுமி நினைத்ததுபோல் கதிர் ஒடிந்து விட்டான்.லெட்சுமி கதிரை தேற்ற மிகவும் கஷ்டப்பட்டு...அவனை வேலையில் கவனம் செலுத்த கெஞ்சினாள்..கதிரால் வேறு எதுவும் சிந்திக்க முடியவில்லை.வீட்டிலே அடைந்து கிடந்தான்.

கதிரின் நிலை பொறுக்க மாட்டாமல் லெட்சுமி முருகனிடம் கதிருக்கு முல்லையை தரும் படி கேட்டாள். முருகன் கலையரசி க்கு வாக்கு கொடுத்துவிட்டதை காரணம் காட்ட...அவள் முல்லை கதிர் அன்பை பற்றி சொல்ல பார்வதி பொறிந்து விட்டாள்..

முல்லை கதிரை மறந்துவிட்டாள்..அது காதல் அல்ல வெறும் கவர்ச்சி தான்..கதிர் தன் மகளின்‌ மனதை கலைத்துவிட்டான் என்றும் எங்கள் பிள்ளை நாங்க சொன்னதை கேட்கும் என்று சொல்லி லெட்சுமியின்‌ வளர்ப்பை பற்றி தவறாக பேச அவளின் முயற்சி பயனளிக்கவில்லை

இதை லெட்சுமியிடம் கேட்ட கதிர் ஏமாற்றத்தோடும்.. கனத்த இதயத்தோடும் சென்னை நோக்கி பயணம் செய்தான்.அவனுக்கு இந்த உலகத்தின் மீது அளவிலா வெறுப்பு...முல்லை மீது கோபத்தை காட்டிலும்..அவனால் அவளை தன் வசப்படுத்த முடியாத இயலாமை மிகவும் பாதித்தது..தன்னுடைய கையாலாகத்தனம் என்று முடிவு கட்டி அவனையே நொந்து கொண்டான்.

' இவ உண்மையிலேயே நம்ம காதலிக்கலயோ...வெறும் கவர்ச்சி தானா...எப்படி அவளால் என்ன பார்த்தே இப்படி பேச முடியுது...எவ்வளவு நாள் யோசித்தும் அவனால் விடை காணமுடியவில்லை' ..பல நாள் தூங்காமல் அப்படியே வெறித்திக்கொண்டிருப்பான்.

எப்படியாவது என்னைக்காவது call பண்ணுவா..பண்ணுவா என்று எந்த unknown number ல் இருந்து அழைப்பு வந்தாலும் பதறி பதறி எடுப்பான்.ஒவ்வொரு முறையும் அவனுக்கு வேதனையாக ஏமாற்றமாக இருக்கும்..ஒரு கட்டத்தில் அவனுக்கு அவனை கண்ணாடியில் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.. தன்னை போல் ஒரு பைத்தியக்காரன் உலகத்திலேயே இல்லை என்று முடிவு செய்து தன்னை வேலையில் எடுத்துக்கொண்ட அந்த கம்பெணியில் கடினமாக உழைத்தான்.உழைப்பை தவிர வேறு சிந்தனை இல்லை...வார இறுதி நாட்களில் கூட வேலை தான்.அவனின் தனிமை அவனுக்கு பயமாக இருந்நது..வேலை தான் அவனுக்கு உற்ற நண்பன். குன்னக்குடி வருவதே மிக அரிது...ஊர் பற்றி சிந்திக்கவே எரிச்சலாக இருந்தது..அவனுக்கு பெண்களிடம் பேசுவதே பிடிக்கவில்லை..வைஷ்ணவி அவனை பழைய நிலைக்கு மாற்ற படாதபாடு பட்டாள்..

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now