எதிர்மறை நிழல்கள்

605 59 26
                                    

கதிர் காவல் நிலையம் வரும் போது மூர்த்தியும்..ஜெகாவும் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

ஒரு அரசியல்வாதி தன் பினாமி மூலம் கருப்பு பணத்தை ஆனந்த் ஜீவா வின் வட்டிக்கடை மூலம் rotation ல் விட்டதாகவும்..அதற்கு ஜீவாவும் உடந்தையாக இருந்தாகவும் குற்றம்
சாட்டி ஜீவா கைது செய்ய பட்டிருந்தான்.
ஜீவா வின் கையெழுத்து மட்டுமே agreement ல் இருந்ததால் ஆனந்த் தப்பிவிட்டான்...ஜீவா மாட்டிவிட்டான்...

கதிர்..மூர்த்தி..ஜெகா மூவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று வக்கீலை அழைக்கும் போது...

கதிர் என்ற பழக்கப்பட்ட குரல்..

வைஷ்ணவியின் தந்தை நின்று கொண்டிருந்தார்.

கதிர்: Uncle..

Uncle: என்ன கதிர்..இங்க நிக்கிற?

கதிர்: ஒரு problem uncle.எங்க ஜீவா அண்ணன பொய் case la arrest பண்ணிட்டாங்க...

கதிர் மொத்த விஷயத்தையும் அவரிடம் சொல்ல...அவர் வக்கீல் என்பதால் அவர் கதிருக்கு help பண்ண சம்மதித்து அவர்களை அருகில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்தார்.

கதிர் தன் தந்தையோடு வருவதை பார்த்த வைஷ்ணவிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்...அவள் கதிரை பார்த்ததில் ஏதோ அவளுடைய பொருள் அவளை தேடியே வந்துவிட்டதாக நினைத்தாள்...கதிர் அவளிடம் பேசவில்லை...அவளை கதிர் முழுவதுமாக ஒதுக்கினான்.

ஒரு வழியாக அவர்களின் உதவியோடு bail amount 2 லட்சத்தில் 1 லட்சம்  வைஷ்ணவியின் தந்தையே காலங்கருதி கடனாக குடுக்க மீதி 1 லட்சத்தை கதிர்  emergency க்காக வைத்திருந்த  பணத்தில் இருந்து பிரட்டி கட்டினார்கள்.

(கதிர் வைஷ்ணவியின் தந்தையிடம் பணம் வாங்க ஒத்துக்கவில்லை...ஆனந்திடம் ஜெகா கேட்டபோது அவன் கைவிரித்துவிடவே அவர்களுக்கு வேறு வழி இல்லை... வைஷ்ணவியும்..மூர்த்தியும்..ஜெகாவும் அவசரங்கருதி கட்டாயப்படுத்தியதால் அடுத்த வாரம் பணத்தை தந்து விடுவதாக உறதியளித்து அவரிடம் பணம் பெற்றார்கள்...)

இந்த இரண்டு நாளும் கதிர் குன்னக்குடி செல்லவில்லை.. வைஷ்ணவி வீட்டிலேயே இருக்கும் படி வற்புறுத்தியும் கதிர் சம்மதிக்கவில்லை.. Mansion ல் தங்கி கொண்டான்...

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now