நிற்க அதற்கு தக

606 55 8
                                    

1 மாதமாக கதிரும்..முல்லையும் பேசி கொள்வதில்லை..

முல்லை தன் கவனத்தை முழுவதுமாக படிப்பின் பக்கம் திருப்ப

கதிர் கடையின் வளர்ச்சில் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டான்.

அந்த இடைவெளி அவர்களுக்கு தேவைப்பட்டது..

முல்லை கதிருக்கு இந்த இடைவெளி அவசியம் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொண்டாள்..

கதிரும்..முல்லையும் பெரியோர்கள் முன்னிலையில் மட்டும் ஓரிரு வார்த்தைகளில் தேவையான விஷயங்களில் பேசி கொண்டாலும் தங்கள் அறையில் அவர்கள் பேசி கொள்வதில்லை....

பெரும்பாலும் முல்லை புத்தகத்தோடும்...கதிர் கடை..வீட்டுக்கு வந்தால் laptop என்றே காலம் தள்ளினார்கள்.

லெட்சுமி அம்மாள் மட்டும் ஏதோ அவர்களுக்குள் சரியில்லை என்று உணர்ந்தாள்..ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே பேசி சரி செய்து கொள்ளட்டும் என்று இருந்தாள்.கணவன் மனைவி விஷயத்தில் எல்லாவற்றிலும் புகுவது சரியில்லை சிறிது நாள் பொறுத்து பார்க்கலாம் என்று இருந்தாள்.

முல்லை ஆரம்பத்தில் கதிருடன் பேச‌ முயற்சி செய்தும் பலனில்லை..கதிர் முல்லை பேச வரும் போதெல்லாம் uncomfortable ஆக இருப்பது பார்த்து முல்லை மிகவும் வருத்தப்பட்டாள். She realised she must have hit a nerve.

தான் இப்போது பேசினால் சரியாகாது என்பதால் முல்லை கதிருக்கு தினமும் sorry messages அனுப்பினாள்...கதிர் அதற்கு பதில் அளிப்பது இல்லை...

காலையில் எழுந்ததும்
Good morning..
Lunch time ல் சாப்டீகலா? என்றும் message அனுப்புவாள்...கதிர் பதிலளிப்பதுமில்லை அவள் எதிர்பார்ப்பதுமில்லை...

இரவு தூங்கும் முன் கை எட்டும் தூரத்தில் இருக்கும் கணவனுக்கு
' Good night mama..Hope you speak to me tomorrow' என்று message அனுப்பிவிட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருப்பாள்.

கதிர் கண்டும் காணாததுமாய் அந்த Msgs எல்லாம் கடந்து செல்ல..

அவள் வருத்தத்துடன் தூங்கிவிடுவாள்.

அவள் தூங்கியதும் கதிர் அவளையே பார்த்துக்கொண்டிருப்பான்..அவளை பார்க்கும் போது பாவமாகவும் அதே நேரம் அவள் பிடிவாதமும் ஒன்றாக கண் முன் நிற்க குழப்பத்துடன் தூங்கிவிடுவான்.

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now