இவன்‌ யாரோ?

3K 69 2
                                    

இடம் : பிள்ளையார்பட்டி

தர்ஷினி: முல்லை..எங்கடி இருக்க?
முல்லை: வண்டில அப்பா கூட வந்துகிட்டு இருக்கேன்டி. Bus அ பிடிச்சு வைடி.
தர்ஷ்: சீக்கிரம் வாடி. இன்னும் 5 mts la bus start பண்ணிருவாங்க
முல்லை: அப்பா..சீக்கிரம் போங்க..Bus கிளம்ப போகுது..
முருகன் அப்பா: அம்மாடி இருடி.. எப்படியாவது பிடிச்சுடலாம்.இல்லாட்டி அப்பா குன்னக்குடி stop la யாவது ஏத்தி விட்டுறேன்.
முல்லை: குன்னக்குடி என்றதும் அவள் மனதில் சுளுக் என்றது.
முருகன் அப்பா: அம்மாடி..அப்பா வண்டி ஓட்டுற வேகத்த மட்டும் பாரு முல்லை இப்ப..அப்பா அந்த காலத்தில ரேக்ளா ஒட்டுன‌ ஆளும்மா..
முல்லை: அப்பா..காமெடி பண்ணாதீங்க..

(சொன்னபடி பிள்ளையார்பட்டி பஸ் stop முல்லை வந்து சேரவும் அழகப்பா கலைக்கல்லூரி பேருந்து கிளம்ப ஆயத்தமாக இருக்கவும் சரியாக இருந்தது)

முருகன் அப்பா: அம்மாடி..பத்திரமா போய்ட்டு வாமா...
முல்லை: சரிப்பா. நீங்க சாப்பிட்டு மறக்காம Sugar மாத்திரை போட்டுக்குங்க..அம்மாவ Physiotherapist கூட்டிட்டு போய்ட்டு வந்துடுங்க..
முரு: சரிடாமா..
(அவருக்கு அவள் மகள் தான் எல்லாம்.. உயிரை விட ஒரு‌படி மேல்‌ என்று வைத்து கொள்ளலாம்)
தர்ஷ்: வாவ் முல்லை. சூப்பரா இருக்கடி.இந்த சுடி எப்படி எடுத்த? உனக்கு மட்டும் எப்படி எத போட்டாலும் அழகா இருக்கு?
(முல்லைக்கு தான் அழகு என்பது தெரியும்.ஆனால் அதை அவள் தலையில் ஏற்றிக்கொள்வது இல்லை.அவள் அழகை பற்றி பலரும் பாராட்டுவதுண்டு).
முல்லை: தர்ஷ்.போதும்டி..நீ கூடத்தான் அழகா இருக்க..என்ன‌ இன்னைக்கு உற்சாகம் அதிகமா இருக்க மாதிரி தெரியுதே?
தர்ஷ்: முல்லை நாம இன்னைல இருந்து second year di. Seniors..Freshers la வருவாங்க..காலேஜ்ல கலக்குறோம்.
முல்லை: செமடி. தெரிக்க விடுறோம்.Juniors பசங்கள் நம்ம gang அ பாத்தாலே terror ஆகனும்.
பேசிக் கொண்டு இருக்கும் போதே பேருந்து குன்னக்குடி யை நெருங்கியது.
அது என்னமோ தெரியாது குன்னக்குடி வந்தாலே முல்லையின் மனது சற்று பாரமாகவும் பரபரப்பாகவும் இருக்கும்.
முல்லையின் கண்கள் சற்று ஊடுறுவும்.
அன்று‌ ஏமாற்றம் தான். உறவினர்கள் யாரும் புலப்படவில்லை.

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now