உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 1

3K 42 4
                                    

COPYRIGHT WARNING!!!
முக்கிய குறிப்பு !

எஸ்.ஜோ அல்லது எஸ்.ஜோவிதா  எனும் பெயரில் வரும் எல்லா நாவல்களும் இந்தியாபிரான்ஸ் உட்பட 262 நாடுகளில் COPYRIGHT பெற்ற  நாவல்கள்.

எனவே எந்த நாவலையும் ஆசிரியரின் அனுமதி இன்றி பிரதி எடுக்கவோ, அச்சு எடுக்கவோ,
வேறு எந்த இணையத்தளத்திலாவது பிரசுரிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மீறுவோரின் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும்.

https://youtu.be/QmqC78hLg00?si=k6Vl8xy9m6TjbB2s
1
'ஏய் முள்ளங்கி..ஏய்...உன்னைத்தான்..வாடி இங்கே...! என் ரூமை கிளீன் பண்ணாம அங்கே என்னடி லுக்கு விட்டுகிட்டு இருக்கே? எத்தனை தடவை சொல்லியிருக்கேன் அந்த டீவி பக்கம் உன் தலை சாயக்கூடாதுன்னு..! எலிசபத் மகாராணி சொன்ன வேலையை செய்யாமல் ஒய்யாரமா சாய்ஞ்சுகிட்டு டீவீ பார்க்குறாங்க... வாடீன்னா..' கர்ஜித்தபடி இருந்த ரோஹித் வசைகளுக்கு சொந்தக்காரியான மாதங்கியை பிடித்து இழுத்தான்.

'இந்தாடி...இன்னும் அஞ்சு செகண்ட்லே என் ரூம் கிளியராகணும்...என் பிரண்ட்ஸ்ங்க எல்லாரும் வர்றாங்க...அவங்க முன்னாடி வந்து நீதான் அவங்களுக்கு என்னென்ன தேவைன்னு கேட்டு செய்யணும்..! அதுவும் இதோ போட்டிருக்கியே இந்த டிரஸ்சில்.' அவன் பற்களிற்கிடையில் வார்த்தையை துப்பினான்.

மாதங்கி மருண்ட விழிகளும் கருத்த முகமுமாக தன் ஆடையை குனிந்து பார்த்தாள். ஆங்காங்கே கிழிசல்களையும் தையல்களையுமாக அது ஒரு புதுவிதமான டிசைனை கொடுத்தது.

'ஏய்..என்ன குத்துக்கல்லாட்டம் நின்னுட்டு இருக்கே.....கமான் குவிக்..கிளீன் மை ரூம்....! த்தூ..! உன்கிட்டே போய் இங்கிலிஷ் பேசிகிட்டு.....அறையை சுத்தம் பண்ணுடி....!'என கட்டளையிட்டான்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Donde viven las historias. Descúbrelo ahora