உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -33

773 26 0
                                    


33

'என்னடா செல்லம்? குட்டி போட்ட பூனையாட்டம் நடந்துகிட்டு கால் வலிக்கப்போகுது...அப்படி உட்காரு...'

'ம்...வாங்க பாட்டிமா...வாங்க..! உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்.. எங்கே போயிட்டு வர்றீங்க..?'

'லேடிஸ் கிளப்புக்கு போனேன்பா...இன்னிக்கு மாதர் சங்கத்துல மீட்டிங்..இருந்திச்சு..'

'மாதர் சங்கமா? ம்..அப்ப ஏதாவது மேடையில் பேச டைட்டில் தந்து இருப்பாங்களே...?'

'ஆமாண்டா ராஜா...என்ன டைட்டில் என்றால்..? இரு...யோசிக்குறேன்..ஆங்... பெண்களும் அவர்களின் ஒடுக்கு முறையும்...'

'சபாஷ்! சூப்பர் டைட்டில்...அப்புறம்'

'அப்புறம் சாதியை ஒழிப்போம்...இப்படி ஒரு ரெண்டு மூணு இருக்கும்..'

'பரவாயில்லையே..நல்லா பேசினீங்களா?'

'இல்லையா பின்னே...வெளுத்து வாங்கிட்டேன்..' அவள் பெருமிதமாக சொல்லிக் கொண்டாள்.

'ஏன் பாட்டிமா...? தெரியாமத்தான் கேட்குறேன்... சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் வேண்டாம்? மேடையில் தான் வாய் கிழிய பேசுவீங்களோ... செயல்படுவது கிடையாதா?'
அவன் குரலில் லேசாகக் கிண்டலும் கோபமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

'என்னப்பா சொல்றே?'
அவனுடைய குரலில் வித்தியாசத்தை உணர்ந்து புரியாமல் அவனை நோக்கினார்.

'ம்...நேரடியாகவே கேட்குறேன்...காலையில் எதுக்கு மாதங்கியை அறைஞ்சீங்க...?' பேரன் கேட்க முகம் மாறியவாளாய்,

'ஓ...அந்த நாய் சொல்லிச்சா...?'

'பாட்டீ!' ரோஹித் அதட்டியவாறு மேலே தொடர்ந்தான். 'வர்ஷாவோட வயசு தானே அவளுக்கும்...அதைவிடுங்க உங்க பேத்தியை போல அவளும் ஒரு பெண்தானே..? அதுக்கு கூட இரக்கம் காட்ட வேண்டாம்? எல்லோருக்கும் பிடித்தவளை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்காமல்..? வந்ததிலிருந்து அவளை குதறிகிட்டே இருக்கீங்க..இது நல்லா இல்லை..'
கோபத்தை அடக்கியவாறு கேட்டவனை.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now