உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - முற்றும்

2.3K 41 25
                                    

44
தனித்து விடப்பட்டதும் ரோஹித் மனைவியை குறும்புடன் பார்த்தபடி ஒரு எட்டு வைத்தான்.

'மா...மாதூ....' அவன் ஆசையாக கூப்பிட அவள் நாணமும் சிரிப்புமாக தலையாட்டியவாறு பின் வாங்கினாள். மறுபடியும் அவன் ஒரு எட்டு வைக்க அவள் ஓடினாள்.

'ஏய்..நில்லு.....' ஓரே ஓட்டமாக ஓடிவந்து பிடித்துக்கொண்டான். அவனது அணைப்புக்குள் அடங்கியவள் தோள்களில் முகம் புதைத்து அவனது சட்டை வாசனையை முகர்ந்து தனக்குள் பரப்பினாள்.

'ம்..இப்ப மட்டும் மோர்ந்துக்கோ... மனசுக்குள்ளே இவ்வளவு காதலை வைச்சுகிட்டு அப்படி ஏண்டி நடந்துகிட்டே...?' மனைவியின் முகத்தை நிமிர்த்தினான். விழிகளாலே அவளது விழிகளை துழாவினான்.

'நீங்க மட்டும் என்னவாம்? சும்மா சும்மா என்னை குத்திக்கிழிக்கலை..?'
ரோஹித்  உதட்டை பிதுக்கியபடி பழிப்புக் காட்டியவளை,

'நானா? குத்திக்கிழிச்சேன்..என்கிட்டே கத்தியே இல்லையே..'
என்றபடி அவளது இடுப்பில் கை  போட்டபடி அருகில் இழுத்தான்.

'அய்யோ...சீக்கிரமா வீட்டை விட்டு போயிடு..யாரையாவது கட்டிக்கோ...நீ போனாத்தான் நிம்மதின்னு...என்று குறை கூறியவாறு அவன் நெஞ்சில் குத்தினாள்.

'பின்னே..நீதான் என்னை பிடிக்கலை..என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு தெளிவா சொல்லிட்டே..அத்தோடு விட்டியா நான் கெட்டவன்னு ஒரு சீல் வேற வைச்சுட்டே...சொல்லு நான் கெட்டவனா?' என்றான் அவன் முகத்தில் கவலை படர

'ம்ஹூம்...இல்லை...எனக்கு சின்னவயசிலே உங்களை பார்த்தா பயம்..அதுவும் அம்மா பணக்கார பசங்க எப்படி இப்பாங்கன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க எல்லாம் சேர்ந்து எனக்கு உங்க மேலே ஒரு விதமான பயம்..வெறுப்பு..'
தயங்கியபடி மெதுவாகச் சொல்லியவாறு அவன் முகத்தைப் பார்த்தாள்.

'அதாவது உன்னை கெடுத்து சீரழிச்சுடுவேன்னு..' அவன் முகம் இறுக கேட்டான்.

'அ...அ....அப்படி இ..இல்லை....'
அவன் தோளில்  உரிமையாகத் தலையைச் சாய்த்தவாறு அவனைப் பார்த்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now