உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 30

849 26 0
                                    


30


'ராஜா ...வர்ஷா...வாங்க வாங்க..' ஜாக்கிங் முடிந்து சிரித்து பேசியபடி வந்த இருவரையும்; டைனிங் டேபிளுக்கு கூப்பிட்டாள். இருவரும் வந்து அமர்ந்தனர். முழுக்கை சட்டையை பின்னுக்கு இழுத்து விட்டு ரோஹித் மேசையில் தாளம் போட்டான். அவனைப்போலவே வர்ஷாவும். செய்தாள் இருவரது சத்தமும் மேற்கத்திய பாடல் ஒன்றின் இசையை எழுப்பியது.

'தொடங்கிட்டீங்களா? கைவைச்சுகிட்டு சும்மா இருங்கப்பா...' இருவருக்கும் டிபன் தட்டை வைத்தவாறே. செல்லமாக அதட்டினாள்.

'கை ஒன்று இருப்பது எதுக்குன்னு தெரியாமல் பேசாதே பிக்மா..' என்றாள் வர்ஷா
அசால்ட்டாக.

'நானா பிக்? நீ என்னைப்போலே ஆவே தானே அப்ப பார்த்துக்குறேன் உன்னை..' பேத்தியை கடிந்தபடி உணவை எடுத்து வைத்தாள்.

'கண்டிப்பா உன் போல ஆகமாட்டேன். ஆக எதிர்பார்த்து ஏமாந்து போகாதே..' பதிலடி கொடுத்துவிட்டு தட்டில் தாளம் போட்டாள்.

'ஏய் எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்..சாப்பிடும் தட்டில் தாளம் போடக்கூடாது என்று...அப்புறம் ஒரு பிடி உணவு கூட கிடைக்க விடமாட்டான் ஆண்டவன்...'


'ஏன்னா அவர்தானே வயல்லே இறங்கி முதுகு முறிய நின்னு களை எடுத்து நெல்லாக்கி எக்ஸ்போர்ட் பண்றாரு...டோண்ட் டாக் ரப்பிஷ் பிஹ்மா..' அலட்சியமாகக் கூறியபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

'உன்கிட்டே சொன்னேன் பாரு..கண்ணா நீ என்னப்பா சாப்பிடாமல் உட்கார்ந்துகிட்டு..' அவள் கேட்க, ரோஹித் மாதங்கி வருகிறாளா ? என மாடியை பார்ப்பதும் , வர்ஷாவுடன் பேசுவதுமாக இருந்தான்.

ரகுராமன் வந்தமர, லக்ஷ்மி அவருக்கும் தட்டை எடுத்து வைத்து பரிமாறினாள். மாதங்கி இல்லாது போக ரகுராமன் குரல் கொடுத்தார்.
 மாதங்கி மெதுவாக இறங்கிக் கீழே வந்தாள்.

'வாம்மா...என்ன இன்னும் சாப்பிடும் எண்ணம் இல்லையா?'

'எ..எனக்கு பசிக்கவில்லை..நீங்க சாப்புடுங்க' என்றுவிட்டு போக எத்தனித்தவளின் கையைபிடித்து அமர்த்தினரார் ரகுராமன்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now