உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -32

757 29 0
                                    


32

காலையில் என்ன நடந்தது என்று தெரியாமல். இருவரும் பேசியபடி வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.


'மாதங்கி பற்று போட்டுருக்கேன் அப்படியே கொஞ்சம் சாய்ஞ்சுக்கோ..மருந்து துப்பட்டாவில் பட்டுவிடாமல்..பார்த்து மெல்ல..' லக்ஷ்மி அவளுக்கு மருந்து போட்டுவிட்டு கைகழுவ விரைந்தாள். விசாலாட்சியிடம் அறைவாங்கியதும் கம்பெனிக்கு ஓடியவள்தான். நேரம் ஆக ஆகக் கன்னங்கள் வலிப்பது போலவும் ரிசப்சனிஸ்ட் என்ன மேடம் கன்னம் உப்பிய மாதிரி இருக்கு என்று கேட்டதும் திகைத்து பாத்ரூம் போய் கண்ணாடியில் பார்த்ததும் அவளுக்கு வலி இன்னும் அதிகமானது போல் இருநதது.

ஒருத்தரின் அடி அதுவும் ஒரு பெண்ணின் அறை இப்படியா வீங்குற அளவுக்கு இருக்கும்..? நம்பமாட்டதவளாக கன்னங்களை பிடித்தபடியே வீடு வந்து சேர்ந்தாள். ரகுராமனும் லக்ஷ்மியும் கூட என்ன ஏதோ என்று பயந்து பேனார்கள். விசாலாட்சி தன் கையையும் அவளது கன்னத்தையும் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு போனாள்.

மாதங்கி ரோஹித்தும் வர்ஷாவும் நுழைவதை ஜன்னலூடாக பார்த்தாள்.

'என்னடா இது? நம்ம ஹிட்லர் எங்கே போயிட்டுது? வீடு சைலண்டா இருக்கு...'வர்ஷா
ஹாலில் பார்வையை ஓட விட்டபடி கேட்டாள்.

'ஏய் மெல்லப்பேசு...அவங்க காதில் விழுந்திடப்போகுது..'

'ம்..விழட்டுமே...என்கென்ன பயம்...?' பழிப்புக்காட்டிவிட்டு போனாள்.

'என்னப்பா....மாதங்கி வந்துட்டாளா?' என்று கேட்ட மகனை நிமிர்ந்து பார்த்த ரகுராமன்

'ம்...'

'ஸ்கூட்டியில் தான் போனாளா?'

'ம்...'

ஃபைல்சை எடுத்துகிட்டு வந்தாளா?'

'ம்....' தந்தை ஒற்றையாக பதில் சொல்ல திகைத்தவன். எதுவும் பேசாமல் மாதங்கியை தேடிப்போனான். கதவை தட்டினான்.

'திறந்து தான் இருக்கு..' அவளது குரல் வர நுழைந்தான். அவள் ஜன்னல் ஓரமாக முதுகு காட்டியபடி நின்றிருந்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now