உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 18

792 26 0
                                    


18

ரோஹித்தின கார் புரோடெக்சன் டிபார்ட்மெண்டிற்கு முன்னால் வந்து நின்றது. காலையில் இருந்து ஆபிசு ஃபாக்டரி புராடெக்சன் என்று அலைந்ததில் உடம்பு அலுப்பாக தோன்றியது. வயிறு வேறு பசி ஏதாவது போடு என்று கூவியது. டைரக்டா ரெஸ்டாரெண்டுக்குள்ளே நுழைந்தான். முதலாளியை பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தான் பேரர். மெனுகார்டை பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டு மேசையில் தாளம் கோட்டவன் முகம் கறுத்தது. அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

வீட்டுக்குளளே காலடி வைத்தான். மாதங்கி காலுக்கு மேலே கால் போட்டுக் கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தாள். இவனைக்கண்டதும் டிவியை ஆன் செய்துவிட்டு தன் அறைக்குள்ளே போக எத்தனித்தாள். அவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு ஏற முயன்றான். மனசு கேட்காமல் –

'மாதங்கி...' என மென்மையாக அழைத்தான். என்ன என்பது போல அவள் நின்ற தோரணையை பார்த்து சினம் முளைத்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல்,

'சீக்கிரமாக வசந்தோட பேரண்ட்சை வந்து பேசச்சொல்லு...' என்றவனை புரியாமல் பார்த்து.

'எதுக்கு?' என உதட்டை மடித்தாள்.


'உன் மேரேஜ் பத்தி பேசத்தான்' என்றான் அதே குரலில்.

'அதைப்பத்தி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? என் விசயத்தில் எதுக்கு அனாவசியமாக மூக்கை நுழைக்குறீங்க...?' என்றாள் அவனை மேலும் கீழும் பார்த்தவாறே. அவளது குரலில் இருந்த நக்கலையும் எரிச்சலையும் பார்த்து,

'நான் ஒன்றும் அனாவசியமாக மூக்கை நுழைக்கலை... அவசியத்தோடுதான்...  சொன்னதை செய்..' என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.

'இதபாருங்க...இப்படி ஏவல் செய்கிறது எல்லாம் என்கிட்டே வேண்டாம்...உங்க வேலை எதுவோ அதை பார்த்துகிட்டு போங்க...என் விசயத்தில் தலையிடும் உரிமை உங்களுக்கு இல்லை....'

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Unde poveștirile trăiesc. Descoperă acum