உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -37

799 27 0
                                    

37
டூர் போனவர்கள் திரும்பி வந்தனர். தூக்கமின்மையாலும், களைப்பாலும் வந்தவுடனேயே ரோஹித் தன்னறையில் தூங்க, வர்ஷா அவளது அறையில் தூங்கிவிட்டாள்.

ரகுராமன் மனைவியிடம் நேற்று நடந்ததை பற்றி மகனிடமும் வர்ஷாவிடமும் மூச்சே விடவேண்டாம் என்றுவிட்டார். விசாலாட்சி வழக்கம் போலே இல்லாத கிளப் மீட்டீங்குக்கு அரட்டை அடிக்க போய்விட்டாள். லக்ஷ்மி வீட்டில் இருக்க பிடிக்காமல் கோயில் போனாலாவது மனசுக்கு அமைதி கிடைக்கும் என்று அவளும் போய்விட்டாள்.

ரோஹித் தூக்கம் கலைந்ததும் எழுந்து குளித்து ஃபிரிஜ்ஜை திறந்து ஆரஞ்சு ஜுசை எடுத்தபடி பால்கனிக்கு வந்தான். வீடு அமைதியாக இருப்பது போல தென்பட்டது. ஜுசை பருகியபடி அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பன் கோபிநாத்துடன் சாட்டிங் செய்யத் தொடங்கினான். பேச்சு வாக்கில் அவனிடம் மாதங்கி பற்றிச் சொல்ல நேரிட்டது.

அப்பொழுதுதான் நண்பனிடம் அபிப்ராயம் கேட்க  நினைத்தவனாக வர்ஷாவுடன்  ஹோட்டலில் பேசியதை சொன்னான்.

'ஏன்டா என்னதான் ரியாக்ஷன் வருது அவகிட்டேருந்து ?' நண்பன் கேட்க,

'ம்..எப்ப பார்த்தாலும் எரிஞ்சு விழுறா...சார் இல்லை சின்னய்யா இப்படி கூப்பிட்டே கழுத்தறுக்குறா...நான் அருகே போனாலே அவ முகத்தை திருப்பிக்குறா..இதை வைச்சு நான் என்ன முடிவுக்கு வருவது? அப்புறம் எதுக்கு என்னையும் வர்ஷாவையும் சேர்த்து பார்த்தால் அவ முகம் கறுக்கணும்? கண்கள் வெறிக்கணும்? வர்ஷா சொன்னது போல அவ என்னை விரும்புறாளோ?'

'என்னதூ? மாதங்கி? உன்னைப் போயா? இவ்வளவு நடந்ததும் அப்புறமும்....அவ உன்னை...டேய் டேய்...ஓவராக கற்பனை பண்ணாதே..' நண்பன் கிண்டலடித்தான்.

'இல்லைன்னா...அவ முக மாற்றத்துக்கு என்ன காரணம்?'
அவனிடமே கேட்டுக்கொண்டான்.

'ம்..நீ வர்ஷா கூட ஒட்டி உரசுவது அதுவும் மத்தவங்க முன்னாடி அமெரிக்கா போல நினைச்சுகிட்டு....நற்பழக்கம் இல்லாதவன் என்று நினைத்து அருவருப்பில் முகம் கறுத்திருக்கும்...' அவன் தலையில் கொட்டுவது போல ஒரு அனிமேஷனைப் போட்டான்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Dove le storie prendono vita. Scoprilo ora