உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 7

921 31 0
                                    

7
விடிந்தது கணவனை சமாதானம் செய்து தூங்க வைத்தவள் தான் தூங்க மறந்து போனாள். விடிய விடிய விழித்திருந்து தூங்காமல் எழுந்து வந்தாள்.

அருமையாக பெற்றதை அடுத்தவர்கள் போல் தள்ளி நின்று கொண்டு வழியனுப்பும் அவலம் யாருக்கு வரும் இந்த நிலமை ?. எந்த பொண்ணுக்கும் தன் நிலை வரக்கூடாது என்று கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தித்தாள்.

ரோஹித் கோட் சூட்டில் வயசுக்கு மீறிய வளர்ச்சியுடன் அம்சமாக இருந்தான். அவனை பார்க்க பார்க்க லக்ஷ்மிக்குள்ளே இருந்த உறுதியெல்லாம் உடைவது போலிருந்தது.

'ரோஹித்...கண்ணா...அம்மாகிட்டே ஒருவாட்டியாவது வாப்பா....' இரு கரம் நீட்டி அவனை அழைத்தாள்.

'போ...மம்மி....கோட் போட்டிருக்கேன் அது கசங்கிடும்ன்னு பாட்டி சொல்லியிருக்காங்க...' அவன் சொல்லிவிட்டு கலையாத கேசத்தை சரி செய்தபடி கண்ணாடியில் அப்படியும் இப்படியும் பார்த்தான். லக்ஷ்மிக்கு பார்க்க தாளமுடியாமல் அவனருகே வந்தாள்.

'கண்ணா.....நான் தொடலை...நீ எனக்கு ஒரு முத்தம் தாயேன்...' அவனது கன்னத்தை வருடியபடி கேட்டாள்.

'சரி..என் ஹைட்டுக்கு குனிங்க....' என்றான். லக்ஷ்மி ஆவலாக குனிந்து கன்னத்தை காட்டினாள்.

'ராஜா! டேய் கண்ணா....டை கூட கட்டாமல் இங்கே என்னடா பண்ணிகிட்டு இருக்கே?' விசாலாட்சி வர அவன் முத்தம் கொடுக்காமலேயே பாட்டிகிட்டே ஓடிப்போனான். லக்ஷ்மிக்கு ஏமாற்றம் தாங்கமுடியவில்லை.

'அத்தே பிளைட்டுக்குள்ளே ரோஹித் ஏறும் போது கவனம்...படிகட்டுகள் இடைவெளிகள் அதிகம்..குளிரும் பெட்சீட் எடுத்து போர்த்தி விடுங்க...அப்புறம்' அவளை  மேலே பேசவிடாது
,
ஆ...எல்லாம் எனக்குத்தெரியும்...உன் புருஷன் எங்கே போயிட்டான் கூப்பிடு அவனை டைம் ஆகுது...'

'இ.....இ....தோ...வ...வந்துட்டார்'

'என்ன ரகுராமா எங்கே போயிட்டே டைம் ஆகுது...'

'அது ஒண்ணுமில்லைம்மா இந்த...'அவர் விளக்கம் கொடுக்க முதலே இடைமறித்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now