உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 25

810 26 0
                                    

25
அவர்களது அறையில் 'என்னங்க மாதங்கிக்கு ரோஹித்மேலே உள்ள பயம் இன்னும் போகலை' கவலையாக சொன்ன மனைவியை பார்த்தார்.

'ம்...அதுதான்மா நானும் யோசிக்குறேன் எப்ப பார்த்தாலும் எலியும் பூனையுமாக இருக்காங்க. நாம இருப்பதை மறந்து ரோஹித் அந்த வார்த்தையை சொல்லியிருக்கான் என்றால் மாதங்கி இன்னும் அவனை நினைத்து பயப்படுகின்றாள் என்று தானே அர்த்தம்? அதுவும் அவனை மட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்னு அர்த்தம்..'

'ஆமாங்க... எனக்குத் தெரிஞ்சு நம்ம பையன் அவகிட்டே தப்பாக நடந்ததாகவோ இல்லை. தப்பான பார்வை பார்த்தாகவோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் மாதங்கிகிட்டே நெருங்கி நின்று பேசுவதே அபூர்வம்..அப்படி பேசினாலும அது கம்பெனி விபரங்களாகத்தான் இருக்கும். வேறு எந்த தப்பான விஷயமும் என் காது வரை வரவும் இல்லை. கண்களுக்கு புலப்படவும் இல்லை...'

'ம்...பார்க்கலாம் நீ தூங்கும்மா..' என்று அவர் படுக்கையில் விழுந்தார்.

'ரோஹித் தன் ஷூவுக்கு ஃபாலிஷ் போட்டுக்கொண்டிருந்தான்.

'என்னப்பா இது? அம்மாகிட்டே தந்தா நான் ஃபாலிஷ் போட்டுத்தரமாட்டேன்...' லக்ஷ்மி அவனிடம் காபி டம்ளரை நீட்டிவிட்டு ஷூவை எடுத்தாள்.

'அம்மா! என்னது? நீங்க போய் என் ஷூவை துடைச்சுகிட்டு...'

'எனக்கு பெத்தபிள்ளைக்கு பணிவிடை செய்ய சின்னவயசிலதான் அந்த பாக்கியம் கிடைக்கலை! இப்பவாவது கிடைக்குதே விடு..'

'ம்ஹூம்...இந்த அன்பான கரங்கள், அழுக்கான என் ஷூவைத்தொடக்கூடாது..' என தாயை கொஞ்சினான்.

'அப்ப என்கிட்டே தா நான் போட்டுத்தர்றேன்...' என்று அங்கே தந்தை வந்தார்.

'மாட்டேன்....என் தாயென்னும் தெய்வம் குடியிருக்கும் கோயில் நீங்கள்' தந்தையை பார்த்து புன்னகைத்தான்,

'என்ன அழகா வசனம் பேசுறே இன்னிக்கு?'

'வசனம் இல்லைப்பா நிஜம்! எனக்கு நேரம் ஆகின்றது விடை கொடுங்கள் தாயே சென்று வருகிறேன்..' என்றான். பெற்றவர்கள் சிரித்துவிட்டு அவனுக்கு சம்மதம் கொடுத்தனர்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Tahanan ng mga kuwento. Tumuklas ngayon