உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -41

847 26 0
                                    

41
விடிந்தது பாதியாக விடியாதது பாதியாக விசாலாட்சி நடுக்கூடத்தில் வந்து நின்று கொண்டாள். அவள் அருகில் ராஜேஸ்வரி வினய், கணேசன் என்று சுற்றிவர இருந்தனர்.

அவர்கள் நின்ற நிலையை வைத்தே உணரமுடிந்தது ஏதோ தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டு யாருக்காகவோ காத்திருந்தனர் போல் தெரிந்தது. ரகுராமனும் லக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கூடத்துக்கு வந்தனர்.

'இதப்பாரு...உங்க எல்லோரையும்...வரச்சொன்னது எதுக்குன்னா...' விசாலாட்சி செருமியபடி பேச ஆரம்பித்தாள் .

'அம்மா சுத்தி வளைக்காமல் சட்டென்று சொல்லும்மா...' ராஜேஸ்வரி கண்ணாடியை துடைத்தபடி தாய்க்கு கட்டளை இட்டாள்.

'சொல்றேன்...நாளைக்கு நல்ல நாள் அந்த நாளே ரோஹித்துக்கும் வர்ஷாவுக்கும் நிச்சயம் பண்ணி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்றதா முடிவு எடுத்திருக்கேன்...'
ஏதோ அறிவிப்பு போல கூறினாள்  விசாலாட்சி.

'அம்மா! என்னங்கம்மா இது? உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுத்துகிட்டு..எங்ககிட்டே ஒரு வார்த்தை கேட்க வேண்டாம்....ஆனால்..' ரகுராமன்.

'அப்ப யார்கிட்டே கேட்கச்சொல்றே...?' விசாலாட்சி
கோபமாக தொடங்க,

'எங்ககிட்டே தான் பாட்டி...' என்றபடி ரோஹித் கையிலிருந்த சூட்கேசை சோபாவில் எறிந்துவிட்டு வந்தான். பின்னால் வர்ஷா

'வாடா ராஜா... பாட்டி சொன்னதில நீ எதை தட்டி இருக்கே? வர்ஷாவும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க...அதான் பாட்டி உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடிவு பண்ணிட்டேன்..'

'யார் சொன்னா நாங்க லவ் பண்றோம்னு?' இருவரும் ஒரு சேர கேட்டனர்.

'என்ன மாப்பிளை இது? பிறந்ததிலேயிருந்து ரெண்டு பேரும் எவ்வளவு அந்நியோன்யமாக இருக்கீங்க..இது தெரியாதா?' ராஜேஸ்வரி.

'ஏன் வர்ஷ்..நீயும் நானும் லவ் பண்றோமா? என்ன?' அவன் கேட்க அவள் தோளைக் குலுக்கினாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now