உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 19

766 25 0
                                    

19

'ஹலோ..அம்மா எப்படிம்மா இருக்கீங்க? கால் சுகமாயிட்டுதா? அவனா இதோ வந்துட்டான்...'

'ரோஹித் பாட்டி அமெரிக்காவில் இருந்த பேசுறாங்க..இந்தா' என்று ரகுராமன் அப்பதான் நுழைந்த மகனை பார்த்து கூறியபடி ஃபோனை நீட்டினார்.
 மைக் வழியாக உரையாடல்களை எல்லோரும் கேட்க முடிந்தது.

'ஹாய் பாட்டிமா!'
'

எப்படிப்பா இருக்கே?'

'எனக்கென்ன அம்மாவோட கவனிப்பில் அப்பாவோட அன்பில் சந்தோசத்துக்கு குறைவில்லை...' தந்தையின் தோளில் தலைசாய்த்தபடி சொன்னான்.

'ம்...ம்..நான் இல்லை என்றதும் அங்கு எல்லோருக்கும் குளிர்விட்டுப்போயிருக்குமே...'

'குளிரா? இங்கேயா? பாட்டி இது சென்னை மறந்துட்டு பேசுறீங்க...' அவன் கிண்டலடித்தான்.

'சரிப்பா...பாட்டி இல்லைன்னதும் கவனம். நீ ஒழுங்கா சாப்புடு கண்டவளுக கண்ணுபட்டுடும்...அவங்க பக்கமே போகாதே வலை விரிக்குறதுக்கு என்றே திரிவாளுங்க விழுந்திடாதே! எனக்கு நீதான் உசிரு. உன்னை அங்கே விட்டுட்டு இங்கே கிடந்து தவிக்குறேன் இந்த காலால்.'
விசாலாட்சி புலம்பினாள்.

'சரி பாட்டி என்னை நினைச்சு நீங்க உடம்பை கெடுத்துக்க வேண்டாம்...அப்படி ஒருத்தரும் என்னை நெருங்க முடியாது..'

'சரிப்பா பார்த்து கவனமாக இரு வைச்சிடட்டுமா?' சொல்லியபடி மறுமுனையில் போனை வைத்தாள் விசாலாட்சி.


'என்னப்பா பாட்டி ஒரு மாசத்தில் வர்றதாக சொன்னாங்க..' லக்ஷ்மி
கலக்கத்துடன் மகனைப் பார்த்தாள்.

'ம்..அப்படித்தான் சொன்னாங்கம்மா..'

'வேறு என்ன சொன்னாங்க?' பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தாலும் மகனின் மனதை அறிய கல்லை எறிந்தார்.

'என்னமோ சொன்னாங்க அவங்க சொன்னதில் பாதியை யார் காதில் வாங்கினா? என்று சொல்லி விட்டுப் போனான். ரகுராமன் சிரித்துக்கொண்டார் ஆக மகன் பாட்டி சொல்லை கேட்கப்போவது இல்லை என்று புரிந்தது

'என்னங்க இந்த சந்தோஷம் எல்லாம் ஒரு மாசம் வரைதானா? உங்கம்மா வராமலே இருக்க கூடாதா?' என்றாள் கவலைபடர

'ம்..நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே..'
மனைவியை பார்த்து ஆறுதலாக புன்னகைத்தார்.

'நிஜமாகவா?'

'ம்..இந்த சந்தோஷம்.நம்ம புள்ளையை மறுபடியும் எங்கம்மா உன்கிட்டேருந்து பிரிக்க விடாமட்டேன்..அதுவுமில்லாமல் அவங்க பேசியது எல்லாம் என் காதில் விழுந்திச்சு கண்டதுகள் கண்ணு படும்..வலைவீச திரிவாளுங்க இதெல்லாம் அவங்க யாரை மனசில் வைத்துகிட்டு சொல்றாங்கன்னு புரியுதா?'

'புரியுதுங்க புரியுது..'

'ஆனால் ரோஹித் இன்னும் சின்ன புள்ளை இல்லை..அவன்கிட்டே அவங்க சொல் எடுபடாது..அந்த நம்பிக்கை எனக்கிருக்கு..'

'அதுதாங்க நமக்கு வேணும்...' லக்ஷமி சொல்லியவாறு கண்களைத்துடைத்தபடி போனாள். இவர்கள் பேசியதை எல்லாம் மாடியிலிருந்து மாதங்கி கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் மனமோ

'இந்த கண்டவளுங்க வலை வீசுறது என்று சொன்னது யாரை? என்னையா? இல்லைன்னா அந்தம்மா யாரை சொல்லப்போறாங்க...? அவங்க பேரனுக்கு நான் வலை வீசுகிறேனாமா? மாறி நடப்பது தெரியுமா? அருமைப்பேரனை அங்கேயே வச்சிருக்க வேண்டியதுதானே.' விசாலாட்சி மேல் எழுந்த கோபம் அவள் மனதை படுத்த இ ஷ்டத்துக்கு திட்டி தீர்த்தது.

(coming)

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now