உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -42

938 30 0
                                    

42
'மாதங்கி....இரு குட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன்...ஆனா எதை முதல் சொல்றது என்று குழப்பம்..' என்றார் ரகுராமன் பலமான பீடிகையுடன்,

'குட் நியூஸா...எனக்கா? என்ன மாமா, கனவா இல்லை ஜோக்கா?' விரக்தியாகச் சிரித்தவளைப் புன்முறுவலுடன் பார்த்தார்.

'ரெண்டும் கிடையாது..! ரியல் தான்...! முதல்லே ஒண்ணு உனக்கு பொருத்தமானவனை தேடிக்கண்டு பிடிச்சுட்டேன்..' என்றார். மாதங்கி திடுக்கிடலுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

'ம்...இந்தா...அவனோட போட்டோ....பேரு சஞ்சய்...' எனறவாறு பையனைப் பற்றிய விபரங்களை சொன்னார்.

'எதுக்கு மாமா போட்டோ எல்லாம்...?'

'நீ பார்க்க வேணாம்....பையன் எவ்வளவு சிமார்ட்டாக இருக்கான்னு...'

'..............'

'ம்...பார்த்துக்கோ...பிடிச்சிருந்தா உடனே கெட்டி மேளம் தான்...' உற்சாகத்துடன் கூறியவரிடம்,

'பிடிச்சிருக்கு..' என்றாள் ஒற்றை வார்த்தையாக, கண்களில் எந்த வித உணர்ச்சியுமின்றி.

'என்னம்மா போட்டோவை பார்க்காமலே பிடிச்சிருக்குன்னு சொல்றே?'

'நீங்க எது செய்தாலும் என் நல்லதுக்குத்தானே செய்வீங்க..' தரையை பார்த்தபடி சொன்னாள்.

'தேங்ஸ்மா..அப்புறம் என்னோடு வெளியே இப்போ வர்றே...உனக்கு ஒரு முக்கியமான ஆளை அறிமுகப்படுத்தப்போறேன்...'

'யார் மாமா? என்னென்னமோ சொல்றீங்க...?'

'நீ வாயேன்...வந்து பார் அப்ப புரியும்...' என அவர் கிளம்பியவாறு காருக்கு அருகே வந்தார்.
வரும் வழியில் மாதங்கி மாமனாரை குடைந்தும் அவர் பதில் சொல்லாமல் சிரித்தபடியே வந்து சேர்ந்தார்.

பெரிய பேலஸ் முன்னால் வண்டி நிறுத்தி விட்டு. உள்ளே நுழைந்தார் மாதங்கியும்
'என்ன மாமா யாரையோ அறிமுகப்படுத்துறேன்னு கூட்டி வந்தீங்க..இவரையா?' எதிரே வந்த தீனதயாளனை பார்த்தபடி மாமனாரிடம் வினாவினாள்.

'இவரை எனக்கு ஏற்கனவே தெரியும் மாமா....நம்ம கம்பனியோட பார்ட்னர்சிப் வைத்திருக்கும் முக்கியமான தொழிலதிபர் மிஸ்டர் தீனதயாளன்.. என்னோட வெல்விஷரும் கூட..' என்றவாறு சிரித்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now