உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 24

794 27 0
                                    

24

ரோஹித் ஆபிஸில் வந்து அமர்ந்தான். சைன் வைக்க வேண்டிய செக்குகளில் சைன் வைத்துக்கொண்டிருக்க ஃபோன் அடித்தது. எடுக்காமல் தனது வேலையை தொடர்ந்தான். அது கட்டாகி நாலாவது தடவையாக அடித்தது. பேனாவை மூடிவிட்டு எடுத்து

'ஹலோ..' என்றான்

'சார்...நான் புரொடெக்ஷன் டிபார்ட்மெண்டில் இருந்து சீவ் மெக்கானிக் வசந்த் பேசுறேன்..' குரலில் பதட்டம் தெரிந்தது.

'என்ன வசந்த்? எனிதிங் பிராபளம்?'

'ஆ..ஆமா சார் இங்க மெக்கானிக் மாரியப்பனும், காளி தாசுவும் கலாட்டா பண்ணிகிட்டு இருக்காங்க..சீக்கிரமாக வாங்க சார்...'

'ஓகே...! இதோ கிளம்பிட்டேன்..' என்றுவிட்டு கோட்டை எடுத்து மாட்டியபடி வெளியேறினான். அடுத்த ஆறாவது நிமிடம் அங்கே நுழைந்தவனை சீவ் மெக்கானிக் எதிர் கொண்டான்.

'வாங்க சார் அ..அவங்க செய்த கொடுமையை பாருங்க சார்.! குடிச்சிட்டு வந்து வேலை செய்யாமல் அத்தனை பார்ட்ஸ்களையும் உடைச்சு நாசப்படுத்திட்டாங்க கேட்க போன எங்களுக்கும் உதைதான்.' அவன் சொல்லியபடி இடத்தை காட்ட ரோஹித் முகம் சிவந்தது.

'மிஸ்டர் மாரியப்பன் என்ன இது? வொர்க் பிளேசா? இல்லை ஃபாரா?' அதட்டலாக கேட்டான்.

'வா..வாங்க எம்.டி சாரு...! வாங்க! எங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப ஃபார்...'

'வில் யூ ஸட்டப்..! வேலைக்கு வந்தா அதை ஒழுங்கா கவனிக்கணும்..நமக்கு எல்லோருக்கும் சோறு போடும் தொழில். அதை மதிக்கலைன்னா ஆண்டவனும் மன்னிக்க மாட்டான்..உங்க குழந்தைகளை யாராவது இப்படி அடித்து துவைத்தால் சும்மா விடுவீங்களா? முடியாது இல்லை... கம்பெனியும் உங்களுக்கு ஒரு குடும்பம். இது சிறப்பாக இருந்தால் தான் உங்க குடும்பம் சிறப்பாக இருக்கும்..இதை புரிஞ்சுக்காமல் நாசமாக்கினால்...வேலை செய்யும் இடத்துக்கு என்று ஒரு தனி மரியாதை கவுரவம் உண்டு. அதை கெடுத்திட்டீங்களே... மிகப்பெரிய தவறு செய்து இருக்கீங்க..காரணம் என்ன என்று தெரிஞ்சு கொள்ளலாமா?'

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now